கம்மம், ஜன.19 தெலங்கானாவில் உள்ள கம்மம் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ரேவந்த் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயகத்தை நிலைநிறுத்த விரும்பினால், பிரதமர் மோடியை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும். இடஒதுக்கீட்டை ஒழிக்கும் என்றார். பாஜக-வால் 240 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தற்போது, பாஜக மறைமுகமாக அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முயற்சி செய்து கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்அய்ஆர் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எழை மக்களின் வாக்கு உரிமையை பறிக்க பாஜக எஸ்அய்ஆர்––– – அய் பயன்படுத்தி வருகிறது. நாட்டில் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு ரேவந்த் தெரிவித்தார்.
