யாழ்ப்பாணம், ஜன.19 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியின் முன் நேற்றுமுன்தினம் (17.1.2026) இந்த நிகழ்வு நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிகழ்வின் போது ‘பொங்கு தமிழ் பிரகடனம்’ வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் கோரிக்கைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப் பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
