ஜேம்ஸ் வாட் பிறந்த நாள் இன்று! (19.01.1736)
நவீன நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மாமேதை ஜேம்ஸ் வாட் 19.01.1736இல் ஸ்காட்லாந்தில் உள்ள கிரீனாக் என்ற ஊரில் பிறந்தார்
அவரது குடும்பத்தினர் சுரங்க கூலித் தொழிலாளிகளாக இருந்த போதுதான் அவர் கல்வி கற்று கணித மாணவனாக சிறந்து விளங்கினார்.
அவரே கணிதத்திற்காக சிறிய சிறிய கருவிகளைச் செய்தார் (Mathematical instrument maker).
கைகளால் இயங்கும் கருவியைக் கொண்டு சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை வெளியே கொண்டுவருவதைக் கண்ட ஜேம்ஸ் வாட் அதற்கான தீர்விற்காக ஏற்ெகனவே பல்வேறு குறைபாடுகளோடு செயல்பட்டு வந்த நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி நவீன நீராவி இயந்திரத்தை உருவாக்கினார். நீராவி வீணாவதைத் தடுக்க ‘தனி ஒடுக்கி’ முறையை அறிமுகப்படுத்தினார். இது எரிபொருள் பயன்பாட்டைப் பெருமளவு குறைத்தது.
இயந்திரங்களின் சக்தியை அளவிட ‘குதிரைத்திறன்’ என்ற அலகைப் பயன்படுத்தும் முறையை இவரே அறிமுகப்படுத்தினார்.
இவருடைய நினைவாகவும், கவுரவமாகவும் மின் திறனின் அலகுக்கு ‘வாட்’ என்று பெயரிடப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகளே உலக அளவில் தொழிற்புரட்சி ஏற்பட மிக முக்கியமான காரணமாக அமைந்தன. இன்று நாம் பயன்படுத்தும் பல நவீன இயந்திரங்களின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அவருடைய உழைப்பே அடித்தளமாகும்.
