சென்னை,ஏப்.23- ராணுவ பீரங்கி படைப் பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற முதல் முறையாக 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மய்யத்தில் ஆண்டுதோறும் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ராணுவத்தில் இதுவரை பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப் போக்குவரத்து, புலனாய்வுப் படைகள் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை போன்ற முக்கிய போர் முனை ஆயுதங்கள் சார்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள் பணியாற்றவில்லை.
இந்நிலையில் முதல் முறையாக இந்திய ராணுவத்தில் போர் முனைகளில் பணியாற்ற பெண்கள் கடந்த ஓர் ஆண்டாக பயிற்சி பெற்று நேற்று (22.4.2023)பயிற்சியை முடித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மய்யத்தில் பயிற்சி முடித்த 5 பெண் அதிகாரிகள், பீரங்கிப் படையில் இணையவுள்ளனர். அவர்கள் முறையாக வரும் ஏப். 29-ஆம் தேதி அப்படை பிரிவுகளில் இணைவார்கள்