நாகர்கோயில், ஜன. 18- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவிலில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற உள்ளார்கள் அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை குமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் விரைவாக செய்து வருகின்றனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கிள்ளியூர் ஒன்றிய செய லாளர் கலைச் செல்வன் மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், சி. அய்சக்நியூட்டன், குமரி நகர செயலாளர் க.யுவான்சு மற்றும் தோழர்களும் சனவரி 22 இல் நாக ர்கோவில் மாநகரில், இதுதான் ஆர்.எஸ்.எஸ் பாஜக-இதுதான் திராவிடம் திராவிட மாடல், பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா அரங்க கூட்டத்தினை எழுச்சிகரமாக நடத்த வேண்டிய ஆயத்தப் பணிகளை மாவட்டம் முழுமையாக சென்று செய்து வருகின்றனர்.
அந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்குவதற்கு தோழர்கள் ஆயத்தமாக உள்ளார்கள்.
