சேலம், ஜன. 18– காணும் பொங்கலையொட்டி கோயிலில் நடந்த விழாவில் பெண்கள் பூசாரியிடம் முறத்தால் அடி வாங்கினர்.
வினோத திருவிழா
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியில் மாரியம்மன் கோயில் உள் ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று முறத்தால் பெண்களை அடிக்கும் வினோத திருவிழா நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று (17.1.2026) நடைபெற்றது.
விழாவில் காப்புக்கட்டி விரதம் இருக்கும் பூசாரிகள் கோயிலில் இருந்து ஊர்வலமாக வரட்டாற்றங்கரைக்கு சென்றனர். அங்கு பூஜை களுக்கு பிறகு காட்டேரி வேடம் அணிந்து இருக் கும் பூசாரிகள், அங்கு வரி சையில் நின்ற பெண்களை முறத்தால் அடித்தனர்.
வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை காரணமான பெண் பக்தர்கள் முறத்தால் பூசாரியிடம் அடி வாங்குவார்களாம். இது குறித்து பக் தர்கள் கூறுகையில், “அடி வாங்கும் பெண்களுக்குள் புத்துணர்வும், தன்னம் பிக்கையும் ஏற்படுகிறதாம். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவாக நல்லவரனும், திருமணமாகி குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்குமாம்.
இப்படியும் ஒரு மூடத்தனம்!
