கடவுளா நீ கல்லா? 55 கடவுளர் சிலைகள் பறிமுதல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை, ஏப்.23 ராஜா அண்ணா மலைபுரத்தில் 200 ஆண்டுகள் பழைமையான 55 ‘கடவுளர்’ கற்சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில் அதனை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பார்வையிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, ‘’தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்பு காவல்துறையினர் 55 புரதான சிலை களை மீட்டுள்ளனர். 55 பழைமையான சிலைகளை கண்டுபிடித்து சிலைக் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் சாதனைப்படைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாகத்தான் பழைமையான சிலைகள் அதிகளவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதில் பாதி சிலைகள், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனி டமிருந்து பெறப்பட்டதாக விசா ரணையில் அம்பலமாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கற்சிலைகள் விலை மதிப்பற்றவை. கற்சிலைகள் என்றாலும் பழைமையானவை என்ப தால் இவை பல கோடி  ரூபாய் மதிப்புடையவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலைகளில் வட இந்திய மொழிகளில் எழுத்துக்கள் உள்ளன. எனவே இவை தென்னிந்தியாவை சேர்ந்ததா அல்லது வட இந்தியாவை சேர்ந்ததா என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கற் சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்த மானவை என கண்டறியப்பட்டு உரிய கோயில்களில் ஒப்படைக்கப்படும்.தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலி யாவுக்கு கடத்தப்பட இருந்த அனுமன் சிலையையும் காவல்துறையினர் மீட்டு சென்னை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட அனுமன் சிலை உரிய கோயிலில் ஒப்படைக்கப்படும்.

இதுவரை அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 13 சிலைகள் கோயில் களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பறி முதல் செய்யப்பட்ட மேலும் சில சிலைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட் டுள்ளன. 1,541 சிலைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

 கடந்த 2 ஆண்டு களில் மிகவும் பழைமை வாய்ந்த 97 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறி முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *