
சென்னைக்கு வருகை தந்திருக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்து, தந்தை பெரியார் நூல்கள், இயக்க வெளியீடுகளை வழங்கினார். சமூகநீதி குறித்தும், தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் குறித்தும் சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினர். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தருமாறு, பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில் அழைப்பு விடுத்ததை, மாண்பமை நீதியரசர் அவர்கள் ஏற்றுக்கொண்டார். இச்சந்தி்ப்பின்போது மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடனிருந்தனர். (18.1.2026).
