டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி வருகை தரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது மமதா மீண்டும் தாக்குதல்; மாநிலத்தில் கலவரம் செய்ய பாஜக திட்டமிடுவதாக கண்டனம்.
தி இந்து:
* திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 வாக்குறுதி. அஞ்சாமை – மனிதநேயம் – அறிவாற்றல் – ஊக்கமளித்தல் வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம். இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கட்டுகட்டாக பணம் சிக்கிய விவகாரம்: பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!! தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவைத் தலைவர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தி டெலிகிராப்:
* ‘பொறுப்புக்கூறல் மிக முக்கியம்’: தேர்தல் ஆணையத்தின் சட்ட பாதுகாப்புக்கு அசோக் லவாசா கண்டனம். “ஒரு ஜனநாயகத்தில், பொறுப்புக்கூறல் மிக முக்கியமானது. எனவே, என் பார்வையில், இந்த வகையான சட்டப் பாதுகாப்பு இருக்கக்கூடாது. ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அது நீதிமன்றத்தில் பாதுகாக்கப்படும் சோதனையை எதிர்கொள்ள வேண்டும்.” என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் அசோக் லவாசா.
– குடந்தை கருணா
