புத்தகரம், ஜன. 17- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா 13.01.2026 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மகிழ்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்ட கழக செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருமருகல் ஒன்றிய கழகத் தலைவர் இராச.முருகையன், மாவட்டத் துணை தலைவர் பொன்.செல்வராசு முன்னிலை ஏற்றனர். திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் திமுக மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கவுதமன் சிறப்புரையாற்றினார். கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் இளம்.சுந்தர், திமுக மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயகணபதி, கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.ஆர்.அறிவுமணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
திருமருகல் ஒன்றிய துணைத் தலைவர் சின்னதுரை, திமுக சிறுபான்மையினர் நல துணை அமைப்பாளர் ஆர்விஎஸ்.ரபீக், இந்திய தேசிய காங்கிரஸ் திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் ஜெயப்பிரியா, திமுக மாவட்ட ஆதி நலக்குழு துணை அமைப்பாளர் சேகர், புத்தகரம் ஊராட்சி திமுக பொறுப்பாளர் திருவேங்கட ரவி, திமுக ஒன்றிய துணை செயலாளர் சுமதி குருமணிமாறன், திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சவு.பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக சி.தங்கையன், கழக ஒன்றிய மகளிரணி மு. ஹேமலதா, நாகை நகர கழக செயலாளர் சண்.ரவிக்குமார், கழக ஒன்றிய இளைஞரணி தலைவர் சண்முகம், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய துணை அமைப்பாளர் க.சபரீஸ்வரன், திமுக ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராம்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமருகல் ஒன்றிய நிர்வாக குழு ராஜேஷ்கண்ணன், வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஸ்கர், திமுக இளைஞரணி குமரேசன், கஜேந்திரன், சுதாகர், கழக புத்தகரம் லட்சுமணன், திராவிட மாணவர் கழக மணிபாரதி, மணிகண்டன், ரூசோ குப்தா, ரூபேஸ் குப்தா உள்ளிட்ட கழக, திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பித்தனர்.
அனைவரும் ஒன்று கூடி பொங்க லிட்டு திராவிட பொங்கல், சமத்துவ பொங்கல், பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.
தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோடு நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அண்ணல் அம் பேத்கர், பச்சை தமிழர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் படங் களுக்கு மலர்மாலை அணிவித்து விழா தொடங்கியது. திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் மு.குட்டிமணி நன்றி உரை யாற்றினார்.
