கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்
சேலம்,ஏப்.23- திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும், பெரியார் அறக்கட்டளை உறுப்பினருமான – சேலம் பழனி புள்ளையண்ணன் அவர்களது 70 ஆவது ஆண்டு ( 22.4.2023) பிறந்த நாள் விழா குள்ளக் கவுண்டனூர் அவரது சுயமரியாதை இல்லத்தில் கழ கக் குடும்ப விழாவாக சிறப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெரியார் அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமை தாங்கிப் பேசினார். விழா நாயகரின் தாயார் காளியம்மாள், அவரது வாழ்விணையர் ரத்தினம், மகன் வீரமணி, மருமகள் டாக்டர் வெண்ணிலா, சங்கீதா, பெரியார் பிஞ்சு கயல்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள், உறவினர்கள் வருகை தந்து அவருக்குப் பயனாடை, புத்த கம், நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள். குறிப்பாக சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக் கல், ஈரோடு ஆகிய மாவட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். பிறந்த நாள் விழா கூட்டத்தை மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஒருங்கிணைத்தார்.
நிகழ்வில் சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் கவிஞர் சி.சுப்பிரமணியம், மண்டல செய லாளர் விடுதலை சந்திரன், மருத்து வர் சரவணன், மேட்டூர் மாவட் டத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கா.நா.பாலு, சேலம் மாவட்ட தலைவர் அ.ச.இளவழ கன், செயலாளர் பா.வைரம்,. ஈரோடு மண்டல தலைவர் இரா.நற்குணன், பேராசிரியர் ப.காளிமுத்து, மாவட்ட ப.க.செயலாளர் சி.மதியழகன், மாந கர தலைவர் இளவரசன், மாநகர செயலாளர் ராவண பூபதி, சேலம் தமிழர் தலைவர், மேட்டூர் கல யரசன், உதயபாஸ்கர், குமார், நாகராஜன், சோமசுந்தரம், அமரா வதி, முல்லைவேந்தன், ஓமலூர் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், ஆத்தூர் மாவட்ட தலைவர் வான வில், செயலாளர் சேகர் , அண்ணா துரை, ஜெயராமன், எம்.எஸ்.பி.ரத் தினம், இளங்கோ, பன்னீர், மெணசி, மேட்டூர் ஜெயலட்சுமி, கடவுள் இல்லை சிவக்குமார், ஆத்தூர் தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக விழா நாயகர் பழனி புள்ளையண்ணன் – பிறந்த நாள் மகிழ்வாக மேட்டூர் பெரியார் படிப்பகம் புதுப்பிக்க ரூபாய் 10,000த்தை மேட்டூர் கழக பொறுப்பாளர்களிடம் அவரும் அவரது வாழ்விணையர் ரத்தினம் ஆகியோர் வழங்கினார்கள். ஏற்கெனவே விடுதலை”, வளர்ச்சி நிதி ரூ. 10,000ம் வழங்கப்பட் டுள்ளதும் குறிப்பிடத்தக்து.
கழகத்தின் கட்டுப்பாடுடையவனாக, நம் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி பயணிப்பேன் என்று கூறி வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.