மோசடி சாமியார் தப்பி ஓட்டம் – காவல்துறை வலைவீச்சு
தேனி,ஏப்.23- பெரியகுளம் அருகே பூஜை செய்வதாக கூறி பணத்தை திருடி தப்பியோடிய சிவகங்கை சாமியார் ராம்குமார் மீது வழக்குழு பதிவு செய்து தென்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியகுளம் அருகே வடுகபட் டியை சேர்ந்தவர் வெள்ளைப் பூண்டு வியாபாரி ஞானபிரகாஷ் (வயது 41).இவர் தென் மாவட்டங் களுக்கு சென்று வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 10.8.2022 அன்று வியாபாரத்திற்கு பொட்டல் புதூர் சென்ற போது வாடிக்கையாளர் மைதீன் பாய் என்ப வரிடம் தனது கஷ்டத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது மைதீன் பாய், சிவகங் கையை சேர்ந்த சாமியார் ராம் குமார் என்பவரின் கைப்பேசி எண்ணை கொடுத்து, “அவரிடம் பேசு பூஜை, பரிகாரம் செய்து கஷ்டத்தை போக்குவார்” என்று கூறியுள்ளார்.
அதனை நம்பிய வியாபாரி ஞானபிரகாஷ் ராம்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 18.8.2022 அன்று வடுகபட்டி யில் உள்ள ஞானபிரகாஷ் வீட்டிற்கு வந்த ராம்குமார் ,வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பூஜை செய்துள் ளார்.
அப்போது ஞானபிரகாஷ் முகத்தில் திருநீறுடன், கருப்பு மையை பூசியதாக தெரிகிறது. உடனே ஞானபிரகாஷ் நினைவு இழந்து விட்டதாகவும், நினைவு திரும்பி பார்த்த போது ராம்குமாரையும், வீட்டில் இருந்த ரூ 1,40,000 பணத்தை காணவில்லை.
இதுகுறித்து மைதீன் பாயிடம் விவரத்தை கூறி அவருடன் சென்று ராம்குமாரிடம் பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் சாமியார் ராம்குமார்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.