சமுக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு ரூபாய் 3,500 கோடி வழங்க வேண்டி உள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அதுல் சந்துருக்கர் விசாரித்தார் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் வாதாடினார். ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்காததால் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மனுவை விசாரித்த நீதிபதி ஒன்றிய அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க ஆணை பிறப்பித்து வழக்கை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
