சாமி.சிதம்பரனார் அவர்கள் தந்தை பெரியாரின் வாழ்க்கையை, அவரது கொள்கைகளை – பொதுத் தொண்டை – சிறப்பியல்புகளை –பண்பு நலன்களை – பெரியார் எனும் புரட்சியாளரைபற்றி 1939 வரையிலான பெரியாரின் வரலாற்றை நூலை ‘தமிழர் தலைவர்’ என்று தலைப்பிட்டுஎழுதிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.
இவர் தஞ்சை மாவட்டம் கடகத்தில் 1.12.1900 ஆண்டில் பிறந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்று 1923இல் பண்டிதர் பட்டம் பெற்றார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
குடிஅரசு ஏட்டில் கட்டுரைகள் பல எழுதியவர். குடிஅரசு, விடுதலை, திராவிடன் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருக்கும் பேரு பெற்றவர்.
1930ஆம் ஆண்டு அன்னை நாகம்மையார் தலைமையில் ஜாதி மறுப்பு – விதவை மறுமணத்தினை சுயமரியாதைத் திருமண முறைப்படி செய்து கொண்டவர்.
தந்தை பெரியார் முதல் முறையாக மலேசியா – சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உடன் சென்ற அய்யாவின் அணுக்கச் செயலாளர் ஆவார்.
தந்தை பெரியார் நிலைப்பாடு குறித்து எதிர் கருத்து கொண்டோருக்கு ‘‘எதிர்ப்பில் வளர்ந்த ஈ.வெ.ரா.’’ எனும் ஆணித்தரமான கட்டுரை மூலம் பதிலுரைத்த பெரியாரின் வழி போற்றிய பெருமகனார் – எழுத்து – பேச்சு மூலம் பெரியாருக்கு துணையாக விளங்கிய சாமி. சிதம்பரனார் 17.1.1961இல் மறைந்தார்.
