மோடியின் தேர்தல் வெற்றிக்கானது என்று கூறிய மேனாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சிபிஅய் விசாரணைக்கு அழைப்பு
புதுடில்லி, ஏப். 23- இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு-காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஅய்) தாக்கீது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்கீது குறித்து பதில் அளித்துள்ள மாலிக், “சில விளக்கங்கள் தேவைப்படுவதாக இங்குள்ள ஏஜென்சியின் அக்பர் சாலை விருந்தினர் மாளிகையில் சிபிஅய் தன்னை ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் சிபிஅய் அதிகாரிகள் என்னிடம் இருந்து சில விளக்கங் களை பெற விரும்புகிறார்கள், இதில் நானும் அவர்களுக்கு ஒத் துழைப்பு கொடுக்க விரும்புகிறேன். நான் ராஜஸ்தானுக்குச் செல்கி றேன். அதனால் ஏப்ரல் 27 முதல் 29 வரை நான் நேரில் வருவதாக தெரிவித்துள்ளேன்” என்று மாலிக் கூறியுள்ளார்.
அக்டோபர் 2021இல், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) தலைவருடன் தொடர்புடைய இரண்டு கோப்புகளை அழிக்க தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மாலிக் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஅய் இரண்டு வழக்குகளை பதிவு செய்து ஏப்ரல் மாதம் 14 இடங்களில் சோதனை நடத்தியது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் (RGIC) மற்றும் சினாப் வெள்ளி பவர் பிராஜக்ட் (Chenab Valley Power Projects Pvt Ltd (CVPPPL) அதிகாரிகள் மீதும் சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது.
“ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, இரண்டு கோப்பு கள் எனக்கு வந்தன. அதில், ஒன்று “அம்பானி” மற்றொன்று “ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளர்” தொடர்பானது.
“இவை இரண்டும் மோசமான ஒப்பந்தங்கள், ஆனால் அதை செயல்படுத்தினால் தலா 150 கோடி பெறலாம் என்று என்னிடம் கூறினர். ஊழலில் சமரசம் செய்யக் கூடாது என்று நான் அவர்களை எச்சரித்தேன்” என்று மாலிக் கூறினார்.
ஆனால் அவை என்னென்ன கோப்புகள் என்பதை மாலிக் குறிப்பிடவில்லை என்றாலும், அரசு ஊழியர்களுக்கு உடல்நலக் காப்பீடு வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் தொடர்பானது.
2018 அக்டோபரில் மாலிக் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மற்ற விஷயம் கிருஹைடல் மின் திட்டம் தொடர்பான குடிமராமத்து பணிகளைப் பற்றியது. கடந்த ஆண்டு, இரண்டு ஊழல் வழக்குகள் தொடர்பாக சத்யபாலிடம் சிபிஅய் விசாரணை நடத்தியது.
பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலச்சியம் குறித்து பேச வேண்டாம் என்றும் இது குறித்து அமைதியாக இருக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக மாலிக் கூறிய சில நாட் களுக்குப் பிறகு அவருக்கு சிபிஅய் சம்மன் வந்தது.
ஆகஸ்ட் 2018 முதல் அக்டோ பர் 2019 வரை ஜே & கே ஆளுநர் மாலிக், சிஆர்பிஎஃப் தனது பணியாளர்களை அழைத்துச் செல்ல அய்ந்து விமானங்களை வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்தது. இதன் விளைவாக ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் ஒரு வாகனத் தொடரணியில் சாலை வழியாக சென்றபோது தாக்கு தலுக்கு இரையானதாக தெரிவித்திருந்தார்.