தேர்தல் நடைமுறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துக!

2 Min Read

தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுரை

அரசியல்

புதுடில்லி, ஏப். 23- தேர்தல் நடை முறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ‘விவிபாட்’ எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ‘எம்3’ வகையிலான இந்த எந்திரங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வந்த லட்சக்கணக்கான எந்திரங்களில் 6.5 லட்சம் விவி பாட் எந்திரங்கள் குறைபாடுள்ளவை என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அவற்றை சரி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், 3.43 விவிபாட் எந்திரங்களுக்கு பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதாக கூறியுள்ளது. எனினும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் நடைமுறைகளில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன்கெரா கூறியதாவது:- 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு (37 சதவீதம்) எந்திரங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், இது தேர்தல் நடைமுறையின் நேர்மையைப் பாதிக்கும் “மிக தீவிரமான பிரச்சினை” என்று காங்கிரஸ் கருதுகிறது.

இது, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பதிவான வாக்குகளை பாதித்திருக்கலாம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நட வடிக்கையாக விவிபாட் எந்திரங் கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான கேள்விகள் அதிகரித்து வரும் சூழலில், இவ்வளவு பெரிய அளவிலான குறைபாடுகள், தேர்தல் செயல்பாட்டில் பொது மக்களின் நம்பிக்கையை குலைக்கிறது. எனவே வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முழு வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது.

இந்த விவகாரத்தை சிறு நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணத்தை அரசியல் கட்சிகளிடம் விரிவாக எடுத்துக் கூறவில்லை. தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பொது நடைமுறையாக மேற்கொள்ளப்படுவதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக எமது அடிமட்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்படுவதை விட, ஊடக அறிக்கைகளுக்குப் பிறகுதான் பிரச்சினையின் அளவை நாங்கள் உணர்ந்துள்ளோம். தேர்தல் செயல்பாட்டில் ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கையும் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது.

இந்த முக்கியமான நேரத்தில், வாக்களிப்பின் சக்தி இன்னும் விலைமதிப்பற்றது என்பதை உறுதி செய்வதுடன், எந்த சந்தேகமும் அதைச் சுற்றி நீடிக்கவும் அனுமதிக்கப்படக் கூடாது.

எனவே எங்களின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாகவும் விரைவாகவும் பதிலளிக்கும் எனவும், விவிபாட் எந்தி ரங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களை விரைவாக முன்கூட்டியே அகற்றுவதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு பவன் கெரா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *