புதுச்சேரி, ஜன. 14- புதுச்சேரி மாவட்டத் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா புதுச்சேரி பெரியார் படிப் பகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
10-01-2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் எதிரொலி பறையாட்டக் கலைக் குழுவினர் தோழர் பெ.பிரசாந்த் தலைமையில் கலந்து கொண்டனர். காலை 11.00 மணியளவில் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புதுச்சேரி மாவட்டத் கழகச் செயலாளர் தி. இராசா வரவேற்று உரையாற்றினார். புதுச்சேரி மாவட்டத் கழகத் தலைவர் வே. அன்பரசன் தொடக்க உரை யாற்றினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழ்நன் சில கழக பாடல்களை பாடினார்.
விழாவில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச் செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், பொதுக் குழு உறுப்பினர் இரா. சடகோபன், ப.க.மாநிலத் துணைத் தலைவர் ஆடிட்டர் கு. இரஞ்சித்குமார், தொழிலாளரணித் தலைவர் வீர.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் சீ.வீ. செல்வகுமார், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க க ஒருங்கினைப்பாளர் இரா. முருகானந்தம், தமிழக வாழ்வுரிமை கட்சி விஜயன், ஆ.அருள்ஒளி, பி போல்ட் சு.பஷீர் அகமது மற்றும் லோகு. அய்யப்பன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன் ஆகியோரின் கருத்துகளைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமை உரையாற்றினார் அதில் புதுச்சேரியில் பொங்கல் விழா, சமத்துவப் பொங்கலாகத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனைப் போன்றே இவ்வாண்டிலும் சிறப்பாக நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த் துகள் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் காப்பாளர் இர.இராசு, பொதுக் குழு உறுப்பினர் கி.அறிவழகன், கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி , துணைச் செயலாளர் ஜெ.ஜீவன் சார்வாகன், நகராட்சி தலைவர்கள் மு.ஆறுமுகம், சு.துளசிராமன், இரா. திருநாவுக்கரசு, களஞ்சியம் வெங்கடேசன், நெட்டப்பாக்கம் கொம்யூன், தலைவர் ஏம்பலம் தெ.தமிழ்நிலவன், ஜெ.ஜெயந்தி, ஜெ.கணேஷ், சிவக்குமார், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி, பிரகாஷ், திருவள்ளுவர் நகர் இராசா, இயற்கை மற்றும் கலாச்சார பாதுகாப்பு இயக்க பிராங்க்ளின், அகில இந்திய மஜ்லித் கட்சி ஜ.சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநாள் பொங்கல் விழா, தமிழ்ப் புத்தாண்டே வருக! என்ற தலைப்பில் திராவிட மாணவர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார்.
அவ்வுரையில் நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனக்கு புத்தாண்டு. தைத் திங்கள் முதல் நாளே! தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.
விடுதலை வாசகர் வட்டச் செய லாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் மற்றும் வடை வழங்கப்பட்டது.
