வடக்குத்து, ஏப்.23- கடலூர் மாவட்டம் வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் 15.4.2023 அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் வைக்கம் நூற்றாண்டு விழா மற் றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம் கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில், மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஒன்றிய கழகத் தலைவர் கனகராசு வரவேற்புரை ஆற்றினார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார்.
அவர் தமது உரையில் : வைக்கம் நூற்றாண்டு விழா சிறப்பு குறித்தும், மனித உரிமையிலும், ஜாதி ஒழிப்பிலும் தடம் பதித்த வரலாறு குறித்தும், தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட தியாகம் பற்றியும், அண்ணல் அம்பேத்கருக்கு ஜாதி ஒழிப்பில் உள் உணர்வை தூண்டிய வைக்கம் போராட்டம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல் கொள்கை பாடல்கள் பாடினார்.
வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில இணை பொதுச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன், குறிஞ்சிப்பாடி கழக செயலாளர் இந்திரஜித், கட்டியங்குப்பம் சேகர், கடலூர் மாதவன், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, கலைச்செல்வி, தமிழ்மணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.