இந்தியா இந்து நாடு என்பதற்கு சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை?
வெளிப்படையாக அறிவித்துவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத்…
நாம் மானத்தோடும், உரிமையோடும் வாழ வேண்டாமா?
தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மலர வேண்டும்!
திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் எழுப்பிய உரிமைக் குரல்!
வெளிப்படையாக அறிவித்துவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத்…
நாம் மானத்தோடும், உரிமையோடும் வாழ வேண்டாமா?
தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மலர வேண்டும்!
திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் எழுப்பிய உரிமைக் குரல்!
திண்டுக்கல், ஜன.14 ‘‘பல நிதி நெருக்கடிகளையும் தாண்டி, சாதனை மேல் சாதனைகள் செய்து, எதிர்க்கட்சிகளின் ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்துவிட்டார் நம்முடைய முதலமைச்சர். அதுவும் இதை எல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டுக்கோப்புக்குள்ளேயே செய்திருக்கிறார். அதனால்தான் கொள்கை எதிரிகள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்” என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்கழகத் தலைவர் உரையாற்றினார்.
- இந்தியா இந்து நாடு என்பதற்கு சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை? வெளிப்படையாக அறிவித்துவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத்… நாம் மானத்தோடும், உரிமையோடும் வாழ வேண்டாமா? தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மலர வேண்டும்! திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் எழுப்பிய உரிமைக் குரல்!
- ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”
- தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
- நம்மை ஜாதிகளால் பிரித்து வைத்ததுதான் ஆர்.எஸ்.எஸ். இதை எதிர்த்து நம்மை ஒன்றாகச் சேர்த்ததுதான் திராவிடர் கொள்கை!
- உங்கள் சந்ததிகள் மானத்தோடும்,
- உரிமையோடும் வாழவேண்டும்!
- பங்கேற்றோர்
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி;
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பிலான தொடர் பரப்புரைக் கூட்டங்கள் வரிசையில் ஒட்டன்சத்திரத்திற்குப் பிறகு திண்டுக்கல்லில் நடைபெற்றது. தூறல் பிசிறிக்கொண்டிருக்கும் போது கழகத் தலைவர் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். தோழர்கள் தலைவரைக் கண்ட உற்சாகத்தில் எழுச்சிகரமான ஒலி முழக்கங்களுடன் அவரை வரவேற்று மகிழ்ந்தனர். இந்நிகழ்வு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் 12.01.2026 அன்று மாலை 6 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் வரும்போது, கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பேசிக்கொண்டிருந்தார். மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசன் வரவேற்பில் அந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. பழனி சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அய்.பி.செந்தில்குமார் முன்னிலை ஏற்று பேசிக்கொண்டிருக்கும் போது மழை வலுத்தது. சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர்களும், கழக மாநில ஒருங்கிணைப்பாளர்களுமான இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிப்பிரகாஷ், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன், துணை மேயர் ராஜப்பா, சி.பி.அய்.(எம்) மாவட்டச் செயலாளர் பிரபாகரன், சி.பி.அய்.மாவட்டச் செயலாளர் மணிகண்டன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் மைதீன்பாவா, வி.சி.க. மண்டல துணைச் செயலாளர் அன்பரசு, த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சேக்பரீத் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தொடர்ந்து பெரியார் உலகம் நிதி வழங்கப்பட்டது. கழகத் தலைவருக்கு மாவட்டக் கழகம் சார்பிலும், இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் மரியாதை செய்தனர். பின்னர் கழகத் தலைவரை உரையாற்றுமாறு அழைத்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தமது உரையின் தொடக்கத்திலேயே, ‘‘அசல் மனுதர்மம்” புத்தகத்தை எடுத்து மக்களுக்குக் காட்டி, “இதுதான் ஆர்.எஸ்.எஸ்.” என்றும், அடுத்த கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்புத்தகத்தை எடுத்துக் காட்டி, “இதுதான் திராவிடம்; ஜனநாயகம்” என்றும் எடுத்த எடுப்பிலேயே தலைப்பை விளக்கிவிட்டார். தொடர்ந்து, ‘‘நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இந்த அரசியலமைப்புச் சட்டத்தைத்தான் காக்கிறது” என்று ஒரு மணி நேரம் விளக்கிப் பேச வேண்டியதை, செய்முறைக் காட்சி மூலம், ஒரு மணித்துளிக்குள் பளிச்சென்று புரிய வைத்துவிட்டார். மக்கள் விளங்கிக்கொண்டதற்கான அறிகுறியை கையொலி செய்து மெய்ப்பித்தனர்.
“இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீதுதான் குடியரசுத் தலைவரிலிருந்து பஞ்சாயத்து உறுப்பினர் வரை பதவியேற்க உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். அந்த உறுதிமொழிப்படி நடப்பதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி! சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்லுவதும் நமது வழமை” என்று திராவிடர் இயக்கத்தினருகே உரிய பண்பை வெளிப்படுத்தினார். ஆனால், ஒரு பக்கம் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின்மீது பிரமாணம் எடுத்துக் கொண்டு, அதே அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறையில் ஒழிக்க முற்படுவதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, இரட்டை நாக்கோடு; இரட்டைப் போக்கோடு இருப்பதுதான் மனுதர்மம். இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி” என்று அம்பலப்படுத்தினார்.
நம்மை ஜாதிகளால் பிரித்து வைத்ததுதான்
ஆர்.எஸ்.எஸ். இதை எதிர்த்து நம்மை ஒன்றாகச் சேர்த்ததுதான் திராவிடர் கொள்கை!
ஆர்.எஸ்.எஸ். இதை எதிர்த்து நம்மை ஒன்றாகச் சேர்த்ததுதான் திராவிடர் கொள்கை!
தொடர்ந்து பேசிய அவர், “பல நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், சாமர்த்தியமாக சமாளித்து எதிர்க் கட்சிகளின் ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து விட்டார் நம்முடைய முதலமைச்சர். அதுவும் இந்த சாதனைகளை எல்லாம் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டுக்கோப்புக்குள்ளேயே செய்திருக்கிறார். அதனால்தான் கொள்கை எதிரிகள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்” என்று நடப்பு நிலவரத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டினார். தொடர்ந்து பொங்கலைப் பற்றி பேச வந்தவர், “மூடநம்பிக்கையற்ற ஒரு விழா, அறிவுத் திருவிழா ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் பொங்கல். அந்த பொங்கல் விழாவைக்கூட ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ன பெயர் வைத்துக் கொண்டாடுகிறது?” என்று கேள்வி கேட்டு, “சமத்துவப் பொங்கல் விழா” என்று பதில் சொன்னார். ‘‘இந்த சமத்துவம் கூடாது என்பதுதான் மனுதர்மம். பேதம் இருக்க வேண்டும்; அவனவன் தலையெழுத்து; அவன் போன ஜென்மத்தில் செய்த பாவம், புண்ணியம் என்று எழுதி வைத்துக் கொண்டு நம்மை ஜாதிகளால் பிரித்து வைத்ததுதான் ஆர்.எஸ்.எஸ். இதை எதிர்த்து நம்மை ஒன்றாகச் சேர்த்ததுதான் திராவிடர் கொள்கை” என்று நூறாண்டு வரலாற்றை ஒற்றை வாக்கியத்தில் விளக்கினார்.
தொடர்ந்து, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது கூடாது மனுதர்மம் தான் இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். எழுதியது. ஜாதி இருக்க வேண்டும். பெண்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். தத்துவம். இது கூடாது என்று மேடையில் மேயராக ஒரு பெண்ணை அமர வைத்திருப்பதுதான் திராவிடம்” என்று அருகில் அமர்ந்திருந்த திண்டுக்கல் மேயர் இளமதி அவர்களை சுட்டிக்காட்டினார். மேயர் உட்பட கழகத் தலைவர் பேசப்பேச, உணர்ச்சி வசப்பட்டு மக்கள் பலமாக கையொலி செய்தனர்.
உங்கள் சந்ததிகள் மானத்தோடும்,
உரிமையோடும் வாழவேண்டும்!
‘‘இந்தியா ஒரு இந்து நாடு. அதற்கு இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதை, ‘இனமலர்’ நாளிதழில் படித்துக்காட்டிவிட்டு, ‘‘வெளிப்படையாகவே அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டார்கள்” என்று வரப்போகிற பெரும் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார். அடுத்து, ”ஓட்டுத்திருட்டை எல்லாம் தாண்டி ஆட்சித் திருட்டு நடத்த எண்ணுகிறார்கள். மக்கள் ஏமாந்துவிடக்கூடாது” என்று எச்சரித்தார். தொடர்ந்து, “வருகிற 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் மறுபடியும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று நாங்கள் சொல்வது என்பது, எங்கள் ஆசையல்ல. உங்கள் சந்ததிகள் மானத்தோடும், உரிமையோடும் வாழவேண்டும். கல்வி உரிமை பெறவேண்டும். மதச்சார்பற்ற அரசின் கீழ் வாழவேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று சொல்கிறோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக திண்டுக்கல் மாநகரச் செயலாளர் செல்வம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் திராவிட தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், மாநகரத் தலைவர் மாணிக்கம், மாவட்ட இளைஞரணித் தலைவர் சக்தி சரவணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்துக்கொண்டும், கடையோரங்களில் ஒதுங்கி நின்றும் கழகத் தலைவரின் உரையை செவிமடுத்து உணர்வு பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
