ஒப்படைப்பு
அதிமுக ஆட்சியில் கடந்த 2016-2020ஆம் ஆண்டு வரை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3598.39 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது.
பசுமை மின்சாரம்
தமிழ்நாடு மின்வாரியம், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்ற உயர் அழுத்த பிரிவு மின் நுகர்வோருக்கு, பசுமை மின்சாரம் விற்கத் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, அவர்களுக்கு ஒரு யூனிட் மின் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ, அதனுடன் கூடுதலாக 50 சதவீதம் சேர்த்து வசூலிக்கப் படும்.
பாடப்புத்தகங்கள்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவப் பாடபுத்தகம், 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்போருக்கான பாடப்புத்தகம் என 4 கோடியே 12 லட்சம் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயார் நிலையில் வைத்துள்ளது.
தொடர…
தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்கு மதியை தொடர வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவிகள்…
கல்லூரி கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தல்.
ஆய்வு
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும் 26ஆம் தேதி விழுப்புரத்துக்கு இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
வலியுறுத்தல்
40 வயதைக் கடந்த பெண்கள் இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
குற்றத் தடுப்பு
சென்னையில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 596 ரவுடிகளை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிவிட்டர்
அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளில் ‘புளூடிக்’ குறியீடு நீக்கப்பட்ட, ஓரிரு நாளில் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
மீட்க…
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்தியாவின் கடற்படைக் கப்பலும், இரண்டு விமானப் படை விமானங்களும விரைந்துள்ளன.
விரைவில்…
தமிழ்நாடு காவல்துறையின் உத்தரவுகளை உடனுக் குடன் பிறப்பிக்க மற்றும் விரைந்து செயல்பட வசதியாக காவல்துறை அதிகாரிகளுக்கென்று பிரத்யேகமாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.