11.1.2026 அன்று மாலை நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் திராவிட பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபன் ஜெயந்தி இணையரின் 24 ஆவது திருமண நாளை முன்னிட்டு அவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ஆடை போர்த்தி சிறப்பு செய்தார். பொங்கல் விழா நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ,மாவட்ட திராவிடர் கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட துணை தலைவர் மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் முனியம்மாள், தமிழ் ஏந்தி ,குணசுந்தரி, மற்றும் கலைச்செல்வி, கீதா, சுமலதா, திராவிட மணி, மகாலட்சுமி மலர் செல்வராணி புவனேஸ்வரி தமிழ்மணி பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பெரியார் செல்வம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் குறிஞ்சிப்பாடி தி.க தலைவர் கனகராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் உதயசங்கர் செயலாளர் ராமநாதன் நூலகர் கண்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்கல் விழா சிறப்புகளை முழக்கமாக எழுப்பினர். செங்கரும்பும் ,புது பானையும் ,மஞ்சள் கொத்தும், சர்க்கரை பொங்கல் இட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பொங்கலோ பொங்கல் திராவிட பொங்கல் சமத்துவ பொங்கல் தமிழர் ஒற்றுமை காட்டும் பொங்கல் திராவிட மாடல் ஆட்சியின் மாண்பை எடுத்தியம்பும் பொங்கல் என்று முழக்கமிட்டனர்.
திராவிட பொங்கல் விழா
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
