24.4.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉பாஜக ஆளும் கருநாடக அரசுதான் நாட்டிலேயே அதிக ஊழல் மிக்க அரசு என ராகுல் குற்றச்சாட்டு.
👉இந்தியா அறிவு நாடாக வேண்டுமானால், வேதத் தையும், சமஸ்கிருதத்தையும் பேணி வளர்க்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிதான் 2024இல் இந்தியாவை காக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், அகிலேஷ், மம்தாவை சந்திக்கிறார் நிதிஷ் குமார்.
👉நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை 75 விழுக்காடாக உயர்த்துவோம், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உறுதி.
தி இந்து:
👉 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற புல்வாமா தாக்குதல், பாலகோட் வான்வழித் தாக்குதலை பாஜக பயன்படுத்தியது என திரிபுரா மேனாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
👉 உ.பி. தேர்தலில் வெற்றி பெற தாழ்த்தப்பட்டோர், ஓபிசி வாக்குகளை பலப்படுத்த சமாஜ்வாடி முயற்சி. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட அகிலேஷ் வலியுறுத்தல்.
– குடந்தை கருணா