100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் 10 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 12-  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து, தமிழ்நாட்டிலிருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை பாதுகாக்கக் கோரியும், இத்திட்டத்தின் பெயரை மாற்றி, மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பட்டினிப் போராட்டம் சென்னையில் நேற்று (11.1.2026) நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது:

பாஜகவின் சித்தாந்தமே மகாத்மா காந்தியின் பெயரை இந்திய தேசத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் ஓராயிரம் மோடி வந்தாலும் காந்தியின் பெயரை இந்தியாவின் மக்கள் மனதில் இருந்து அகற்றவே முடியாது.

கரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்த திட்டம்தான் மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டமாகும். ஆனால் ஒன்றிய மோடி அரசாங்கம் இந்தத் திட்டத்தை அகற்றி வருகிறது.

பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து பல்வேறு போராட்டங்களை முடித்த பிறகு, இறுதியாக பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருக்கிறோம். அதில் தமிழ்நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இவ்வாறு கு.செல்வப்பெருந்தகை பேசினார்.

இந்தப் போராட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பொருளாளர் ரூபி மனோகரன், நடிகர் மன்சூர் அலிகான், கட்சியின் மாநில துணை தலைவர்கள் ஆ.கோபண்ணா, மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *