டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இலங்கை அரசமைப்பு சீர்திருத்தங்களால் பிரச்சினை; தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை! இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* ஹிந்துத்துவா என்ற பெயரில் போலி நாடகத்தை பாஜக அரங்கேற்றியுள்ளது. மராத்தியர்களின் பெருமையை நாம் காக்க வேண்டும், உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் மும்பையில் ஒரே மேடையில் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்கத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மகுவா, வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் நீக்கம். பாஜக மீது கடும் எதிர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டிரம்ப்பின் வரி விகிதம், தமிழகத்தின் எச்சரிக்கை: தீர்க்கப்படாத மத்திய-மாநில கணக்கு விவகாரங்கள் தமிழ்நாட்டின் நிதிசார் குறிகாட்டிகளைச் சிதைத்து, அதன் கடன் வாங்கும் திறனை கட்டுப்படுத்துகின்றன என்று மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேச்சு.
தி டெலிகிராப்:
* திறன்பேசிகளின் (ஸ்மார்ட்போன்) மூலக் குறியீட்டை தர வேண்டும், ஒன்றிய அரசு மீண்டும் வலியுறுத்தல்: 83 பாதுகாப்புத் தரங்களைக் கொண்ட இந்தத் தொகுப்புக்கு எந்த உலகளாவிய முன்னுதாரணமும் இல்லை என்றும், இது நிறுவனங்களின் தனியுரிமை விவரங்களை வெளிப்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாதிட்டுள்ளன
– குடந்தை கருணா
