சென்னை, ஜன.12 இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அங்கு ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை (Federal System) உருவாக்குவதற்கு இந்திய அரசு தூதரக ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் புதிய அரசியல மைப்பு உருவாக்கப்பட உள்ள சூழலில், தமிழர்களின் நலன் சார்ந்து அவர் வலியுறுத்தியுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
வரலாற்றுப் பின்னணியும் தற்போதைய கவலையும்
திட்டமிட்ட பாகுபாடு: கடந்த 77 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்கள் வன் முறை மற்றும் பாகுபாட்டைச் சந்தித்து வருகின்றனர். இது ஓர் இனப்படு கொலை போன்ற நிலையை எட்டியுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். 1947 முதல் இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் ஒற்றையாட்சி முறையே தமிழர்களின் நில அபகரிப்புக்கும், அடையாளச் சிதைவுக்கும் அடிப்படைக் காரண மாக அமைந்துள்ளது.
புதிய அரசியலமைப்பு அச்சம்: தற்போதைய அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய அரசியலமைப்பும் மீண்டும் ஒற்றையாட்சி முறையையே வலுப்படுத்தும் எனத் தெரிகிறது. இது தமிழர்களின் சுயாட்சிக் கனவைப் பாதிக்கும் என முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
1985-ஆம் ஆண்டு பூட்டானில் நடந்த பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாடு களை’ அடிப்படையாகக் கொண்டு தீர்வு அமைய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் தேசியம்: தமிழர்களைத் தனித்துவமான தேசமாக அங்கீ கரித்தல்.
தமிழர் தாயகம்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழர் களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது.
தன்னாட்சி உரிமை: தமிழ் தேசத்திற்கான அரசியல் தன்னாட் சியை உறுதி செய்தல்.
மலையகத் தமிழர் உரிமை: அவர்களுக்கு முழு குடியுரிமை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல்.
இந்தியாவின் தார்மீகக் கடமை
1987-ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் உட்பட, இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவிற்கு உள்ளது. தமிழ்நாட்டி தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே உள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கருத்தில் கொண்டு, ஒண்றிய அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“மாகாணங்களுக்கு உண்மை யான அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் கூட்டாட்சி முறையை உருவாக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுவே நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
