வாடிப்பட்டியில் கழகத் தலைவர் ஆசிரியர் பிரச்சார உரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முதுகெலும்புள்ள முதலமைச்சர் தமிழ்நாட்டை, தமிழர்களை
‘‘தலைகுனிய விடமாட்டேன்’’ என்று உறுதியளிக்கிறார்!

வாடிப்பட்டி, ஜன.11 ‘‘அ.தி.மு.க. ஓட்டு வாங்க வேண்டுமென்றால் பா.ஜ.க.விடம் நீட் தேர்வு ரத்து என்ற நிபந்தனையை வைக்கலாமே? அதை விட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்பதா?” என்று உரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவாகவும், வாடிப்பட்டி காவல் நிலையம் அருகில் நேற்று (10.01.2026) மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சுவரொட்டிகள், பதாகைகள், கழகக் கொடிகள், சுவரெழுத்துகள் என்ற எல்லா முறைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மாநில தொழிலாளர் பேரவை தலைவர் கா.சிவகுரு நாதன் தலைமையில், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். வாடிப்பட்டி சுயமரியாதைச் சுடரொளிகள் பி.கொண்டல்வண்ணன், எஸ்.எஸ்.சுப்பையா, பொ.வேல்ராஜ், செங்கண்ணன் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மேடையை அவர்களுக்குக் காணிக்கை ஆக்கப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தோழர்கள் சார்பில் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன் ராஜா, வே.செல்வம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அ.வெங்கடேசன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், மதுரை புறநகர் மாவட்ட மகளிரணித் தலைவர் இரா.கலைச்செல்வி, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பெ.பாக்கியலட்சுமி, மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் நா.கணேசன், மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் வீரராகவன் தங்கதுரை, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகர், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், தொகுதி பொறுப்பாளர் சுப.சம்பத், சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், தி.மு.க. வடக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் கோகுல், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்களும், பயண ஒருங்கிணைப்பாளர்களுமான இரா.குணசேகரன் முறையே இயக்கப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி பேசி, அவற்றை வாங்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். இரா.ஜெயக்குமார் மேடை நிகழ்வை நெறிப்படுத்தினார். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பெரியார் உலகம் நிதி வழங்கப்பட்டது.  நிறைவாகக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையில், வாடிப்பட்டியின் சுயமரி யாதைச் சுடரொளிகளை நினைவூட்டிப் பேசினார். பெரியாருக்கும் மதுரை மாவட்டத் தலைவராக இருந்த வாடிப்பட்டி சுப்பையாவுக்கும் இருந்த நெருக்கத்தை நினைவு கூர்ந்தார். அவருடை மகன் சொக்கன் அரசு அதிகாரியாக இருந்து எங்களுக்கு அறிமுகம் ஆனவர் என்றார். தொடர்ந்து சொக்கன் அவர்களுடைய மகனைப் பார்த்தேன். என்னுடைய பேரனைப் போல உணர்வைப் பெற்றோம் என்றார். வாடிப்பட்டி செங்கண்ணன், அன்றைக்கு ஜில்லா போர்டு தலைவராக இருந்த வெங்கடசாமி வாடிப்பட்டியில் மாநாடு நடத்தி, மாணவர் பருவத்திலே நான் வந்து பேசியிருக்கிறேன் என்று பல தகவல்களை பலத்த கைதட்டல்களுக்கிடையே மகிழ்வோடு கூறினார்.  அத்துடன் 1958 இல் தன்னு டைய திருமணத்தை பற்றி, பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் படித்த மாணவர்கள் தன்னிடம் நினைவூட்டியதை எடுத்துரைத்து, வாடிப்பட்டி என்பது நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்று எல்லா காலங்களிலும் திராவிடர் இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்திய இடம் என்று வாடிப்பட்டியின் சிறப்பை எடுத்துரைத்தார். தான் வாடிப்பட்டியில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பேசுவதை நினைவுபடுத்தி, தனக்கும் வாடிப்பட்டிக்குமான உறவை; தொடர்பை உரிமையுடன் பதிவு செய்தார்.

‘வாடிப்பட்டி’ என்று எம்பிராய்டரியில் பெயர் பொறித்த பை!

தொடர்ந்து பெரியார் உலகம் நிதி வழங்கிய தோழர்களுக்கு தலைதாழ்ந்த நன்றி என்று கூறிவிட்டு, 28.01.1940 இல் வாடிப்பட்டியில் தந்தை பெரியாருக்கு நன்கொடை வழங்கியதை நினைவூட்டி, நன்கொடை கொடுத்த; வாடிப்பட்டி என்று எம்பிராய்டரியில் பெயர் பொறித்த பையின் படத்தை கையில் வைத்துக்கொண்டு, 1001 அணா நன்கொடை கொடுத்த தைக் காட்டி, வாடிப்பட்டியின் வரலாற்றை; பங்களிப்பை எடுத்துரைத்து, ‘‘இந்த இயக்கத்தின் வேர்கள் ஆழமானது. விழுதுகளும் சிறப்பாக இருக்கின்றன” என்று கூறி, “இந்த இயக்கத்தை யாராலும் அசைக்கக் கூட முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். இந்தப்பையை நம்முடைய முதலமைச்சரிடமே காட்டியதையும் நினைவு கூர்ந்தார்.

தந்தை பெரியார் தான்!
திராவிடர் இயக்கம்தான்!

நிகழ்ச்சியின் தலைப்பை நினைவுபடுத்தி, 100 ஆண்டுகளுக்கு முன்பு மனுதர்மத்தின் கொடுமையால் நமது மக்கள் கல்வி கற்க முடியாமல் இருந்தனர். திராவிடர் இயக்கம் தோன்றிய பிறகு நம் மக்கள் அனைவரும் நன்றாக படித்துவிட்டு, உலகெங்கிலும் சிறப்பாக வாழ்கிறார்கள். இந்த இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இதைத்தான் செய்தது. அன்றைக்கு கூலிகளாக போனார்கள். இன்றைக்கு மருத்துவர்களாக, பொறியாளர்களாக கொடிகட்டி பறக்கிறார்கள்” என்று கூறி, திராவிடர் இயக்கத்தின் பெருமையை பறை சாற்றினார். மேலும் மனுதர்மம், யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்று வாழ்ந்த நம்மை, ஜாதிகளாகப் பிரித்து வைத்திருந்ததையும், திராவிடர் இயக்கம் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று தலைகீழாக மாற்றியதை இன்றைய ஆட்சி வரையிலும், ”தமிழர்களை தலைகுனிய விடமாட்டேன்” என்று பிரகடனப்படுத்திய முதுகெலும்புள்ள முதல மைச்சரையும் நினைவுபடுத்தி, “இதற்கெல்லாம் யார் காரணம்?” என்று கேட்டு, “இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியார் தான்! திராவிடர் இயக்கம்தான்!” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அழுத்திக் கூறினார்.

வாக்களியுங்கள்; உங்கள் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள்!

திராவிடர் இயக்கத்திற்கு எதிரான மனுதர்மத்தை; ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை அம்பலப்படுத்தியும், அதில் அம்பேத்கர் பங்கையும் சேர்த்துச் சொன்னார். ”குலக்கல்வி ஒழிப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்த போது வாடிப்பட்டியும் போராடியிருக்கிறது” என்று வாடிப்பட்டியின் வரலாற்றை அடுக்கினார். பிறகு அ.தி.மு.க. வை, அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு கல்வியில் செய்துவரும் சாதனைகளை 2021 முதல் இன்றைக்கு மடிக்கணினி கொடுக்கும் வரையிலான சாதனைகளை பட்டியலிட்டார். இறுதியாக, ”2026 இல் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது. நீங்கள் உங்கள் வாக்குகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்; வாக்களியுங்கள்; உங்கள் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள்” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக பகுத்தறிவாளர் கழகம், வாடிப்பட்டி தோழர் பனகல் பொன்னய்யா நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பின்னர் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்த கூட்டத்திற்கு புறப்பட்டார்.

நிகழ்வில் தி.மு.க. மு.பால்பாண்டியன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பால.ராஜேந்திரன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன் மாறன், சி.பி.அய். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, தமிழ்ப்புலிகள் கட்சி மாநில இளம் புலிகள் அணி துணைச் செயலாளர் மு.திருமாவளவன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர்மன்னன், அழ.சிங்கராசன், து.சந்திரன், க.பெரியசாமி மற்றும் இந்தியா கூட்டணிக்கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *