
சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், அம்மாசி மற்றும் பல்வேறு கட்சி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். வாடிப்பட்டி கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

உசிலம்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள், மருத்துவர், போக்குவரத்து ஊழியர்கள், கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

ஆண்டிப்பட்டியில் நாகராஜ் தலைமையில் தோழர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

தேனிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெரியார் பெருந்தொண்டர் ரகுநாகநாதன் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

கம்பத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் செ. தமிழ்ச்செல்வன் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
