
மறைந்த வழக்குரைஞர் சித்தார்த்தன் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியும், வழக்குரைஞர் சித்தார்த்தனின் நண்பருமான ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களும் மறைந்த சித்தார்த்தன் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மறைந்த சித்தார்த்தன் உடலுக்கு அமைச்சர் நேரு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

மதுரையில் கழகப் பரப்புரைக் கூட்டத்தில் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். (10.1.2026)
மதுரை, ஜன.11– மதுரையில் நேற்று (10.01.2026) நடந்த விபத்தில் மறைவுற்ற திராவிடர் கழக மாநில வழக்குரை ஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தனின் உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து இறுதி வணக்கம் செலுத்தினார்.
மதுரை அரசு பொது மருத்துவ மனையில், உடற்கூராய்வு முடியும் வரை காத்திருந்து, மாலை 4 மணிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் தோழர்களும் பெரும் துயருடன் இறுதி மரியாதை செய்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் தாளாத துயரத்துடன், சித்தார்த்தனின் இணையர் சுஜாதா சித்தார்த்தன், மகள் யாழினி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தமிழர் தலைவரைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியும், வழக்குரைஞர் சித்தார்த்தனின் நண்பருமான ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களும் மறைந்த சித்தார்த்தன் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜஸ்டிஸ் பூர்ணிமா, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அஜ்மல் கான், பாஸ்கரன், வீரா கதிரவன், ஒன்றிய அரசின் இணை சொலிசிட்டர் ஜெனரல் கே.கோவிந்தராஜன், மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.காந்தி, பி.சரவணன், சுபாஷ், வழக்குரைஞர் ஆனந்தவள்ளி, பிரசன்ன வினோத், ஜெரின் மேத்தியூ, அரசு அனைத்துத் துறை வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் சங்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், அரசு பிளீடர் அலுவலக ஜூனியர்கள் உள்ளிட்ட ஏராளமான சட்டத் துறை சார்ந்த பெருமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
மேலும், நீதிபதிகள் சிவகடாட்சம், செல்வபாண்டி, அசன் முகமது, செங்கமலச் செல்வன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம், வழக்குரைஞரணித் துணைத் தலைவர் வழக்குரைஞர் நா.கணேசன், சௌ.ஸ்ரீதர், ரா.யாசின், வ.பா.செம்மதி, பா.வாசுகி, மாரிராஜ், கனிமொழி, பாண்டி பிரியா, வேல்முருகன், முருகேசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள், வழக்குரைஞர்கள், நீதித் துறையினர் மறைந்த சித்தார்த்தன் உடலுக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். அந்தப் பகுதியே சோகம் சூழ்ந்து காணப்பட்டது.
பின்னர் திருச்சி – சிறீரங்கத்தில் உள்ள சித்தார்த்தன் அவர்களது சொந்த இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. திருச்சியில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திருச்சி, மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்கள் மரியாதை செலுத்தினர்.
