கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

11.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* திமுகவினர் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளை எல்லாம் பார்க்கும்போது 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* தேசிய மக்கள் தொகை, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு மாநில முதலமைச்சர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* அண்ணாமலை பேச்சால் திடீர் சர்ச்சை: பம்பாய் மகாராட்டிராவுக்கு சொந்தமானது அல்ல என மும்பை முனிசிபல் தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் கண்டனம்.

* அண்ணாமலையை கைது செய்க: 106 பேர் தங்களை மாய்த்துக் கொண்ட போராட்டத்தால் மும்பை உருவானது. அண்ணாமலை பேச்சு இவர்களின் தியாகத்தை அவமதித்த செயல். அவரை கைது செய்ய வேண்டும் என சஞ்சய் ராவத், எம்.பி., முதலமைச்சர் பட்னாவிஸுக்கு வலியுறுத்தல்.

* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம்: வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி பதிவுகளை சரி செய்வதற்கு பதிலாக வாக்காளர்களை நீக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. சிறு எழுத்துப்பிழை அல்லது வயது முரண்பாடுகள் சாதாரண மக்களுக்கு வற்புறுத்தல் நிறைந்த விசாரணைகள், துன்புறுத்தல் மற்றும் ஊதிய இழப்புக்கு வழிவகுப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* அய்-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா கேவியட் மனு தாக்கல்.

* வாக்காளர் சிறப்பு திருத்தம், அய்.பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை இவை அனைத்தும் பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளதாக பாஜக தலைவர்கள் கவலை.

தி இந்து

* புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) பதிலாக புதிதாக இயற்றப்பட்ட விக்சித் பாரத்-ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் கிராமின் (VB-G RAM G) சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை ‘MGNREGA பச்சாவோ சங்கிராம்’ என்ற 45 நாள் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியது.

தி டெலிகிராப்

* பாலியல் குற்றவாளி பாஜக கவுன்சிலராக நியமனம்: மகாராட்டிரா தானே மாவட்டத்தில் உள்ள குல்கான்-பத்லாப்பூர் நகராட்சியில், ஒரு பள்ளியின் முன்னாள் செயலாளரும், பத்லாப்பூர் பாலியல் குற்ற வழக்கில் இணை குற்றவாளியுமான துஷார் ஆப்டேவை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நியமன கவுன்சிலராக நியமித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா

* பாஜகவின் மாட்டு மூத்திர ஊழல்: மத்தியப் பிரதேசத்தின் ‘மாட்டுச் சிறுநீர், மாட்டுச் சாண புற்றுநோய் திட்டம்’ நிதி கார்கள், விமானப் பயணங்கள் மற்றும் அதிக விலையுள்ள இயந்திரங்களுக்கு செலவிடப்பட்டதாக ஒரு விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்திட்டத்திற்காக அரசு 2011இல் ரூ.3.5 கோடி ஒதுக்கியது.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *