புதுடில்லி, ஏப்.24 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ் இன்னும் ஓயந்தபாடில்லை. சமீபத்தில் சில நாடுகளில் கரோனா பரவல் குறைந்திருந்தாலும் மீண்டும் சில நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங் களாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் 948 பேருக்கு தொற்று கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.