டெக்கான் கிரானிக்கல், சென்னை
* 2030ஆம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வையுடன் மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிப்பேன்: ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* ஒன்றிய அரசின் ஏஜென்சிகள், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது – தலையங்கம்.
* தேர்தலுக்கு முன் ஒன்றிய அரசை எதிர்த்து துணிச்சலான போராட்டம்; மீண்டும் ‘வீதி சண்டை’ பாணி அரசியலை கையில் எடுத்த மம்தா: உயர்நீதிமன்றத்தில் ‘ஈடி’, திரிணாமுல் தரப்பு தனித்தனி மனு தாக்கல்.
* நிலக்கரி ஊழலில் அமித்ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களுக்கு தொடர்பு: ஆதாரங்களை வெளியிடுவதாக முதலமைச்சர் மம்தா மிரட்டல்.
* அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு: அமித் ஷா அலுவலகம் முன் திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
* தெரு நாய்கள் குறித்த தீர்ப்பில் எந்தத் தளர்வும் செய்ய முடியாது, உச்சநீதிமன்றம் கறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஜன.28இல் கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்; பிப்.1இல் பட்ஜெட் தாக்கல்:நாடாளுமன்ற கூட்டம் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறும். நாடாளுமன்றத்தின் முதல் கட்ட தொடர் பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முடிகிறது. அதன் பின்னர் மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
* சபரிமலை தங்கம் திருட்டு ஊழலில் திருப்பம்: தலைமை அர்ச்சகன் தந்திரி கண்டரரு ராஜீவரு, கோவிலின் முக்கிய பிரமுகர் கைது!
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* இட ஒதுக்கீடு என்பது விதிவிலக்கோ அல்லது சலுகையோ அல்ல: அரசு ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றிருந்தும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை வழங்கப்பட்ட அருந்ததியர் (பட்டியல் இனம்-ஏ) சமூகத்தைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம். அரசு ஒதுக்கீட்டிற்கு மேலான கூடுதல் கட்டணத் தொகையை மாநில அரசே ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி இந்து
* ஒன்றியத்தில் உள்ள பாஜக தலைமையிலான அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக ‘சிந்திக்கிறது மற்றும் செயல்படுகிறது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
* பிரதமர் மோடி திறந்து வைத்த வாரணாசி ‘டென்ட் சிட்டி’ சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி உள்ளது: என்ஜிடி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் 2023இல் நிறுவப்பட்ட ‘டென்ட் சிட்டி’ சுற்றுச்சூழல் சட்டங்களை “மீறி” இயக்கப்பட்டது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) கூறியுள்ளது.
* அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவு: தஞ்சாவூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமான சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்த்ரா), சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்திலிருந்து அதை வெளியேற்றுமாறு மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (9.1.2026) அன்று உத்தரவிட்டது.
* சீனாவிடம் ‘திட்டமிட்ட சரணடைவு’ மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: இந்திய அரசாங்க ஒப்பந்தங்களுக்கு ஏலம் கோரும் சீன நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முன்மொழிந்ததற்காக நரேந்திர மோடி அரசு மீது காங்கிரஸ் விமர்சனம். சீனா குறித்த தனது “நிலைப்பாட்டு மாற்றத்திற்கு” அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.
தி டெலிகிராப்
* மோடி அரசாங்கத்தின் சாதகமான தருணம் (‘கோல்டிலாக்ஸ்’) வர்ணனைக்கு மேனாள் ஆலோசகர் எச்சரிக்கை: இந்தியப் பொருளாதாரம் தெளிவான மீட்சிக்குரிய அறிகுறிகளைக் குறைவாகவே காட்டுகிறது என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரி மிரட்டல்களால் புதிய அபாயங்களை எதிர்கொள்கிறது என்றும், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், டில்லியில் உள்ள அரசாங்கம் இதை ஒரு “சாதகமான தருணம்” என்று கூறி கொண்டாடி வருகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா
* கருநாடக ஆளுநர் எஸ்.சி இட ஒதுக்கீடு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார், விளக்கங்களைக் கோரினார்; பெலகாவியில் நடைபெற்ற சட்டமன்றத்தின் சமீபத்திய குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப் பட்ட உள் இட ஒதுக்கீடு மசோதா, எஸ்.சி (வலது) பிரிவை குரூப் ஏ-யின் கீழும், எஸ்.சி (இடது) பிரிவை குரூப் பி-யின் கீழும், மற்ற எஸ்.சி சமூகங்களை குரூப் சி-யின் கீழும் வகைப்படுத்துகிறது.
– குடந்தை கருணா
