நாகர்கோவில், ஜன.10- நாகர்கோவில் ஒழுகினசேரியில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது.
குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பலரும் இயக்க நூல்களை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். நேரில் வர இயலாதவர்களுக்கு பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் கோ.வெற்றிவேந்தன் அஞ்சல் மூலமாக நூல்களை அனுப்பி வைக்கிறார்.
மாவட்டத்தில் யார் நூல்கள் கேட்டாலும் அவர்களுடைய இல்லத்திற்கே சென்று நேரடியாக நூல்களை கொண்டு சேர்க்கிறார். புத்தக நிலைய வளர்ச்சிக்காக மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியமும் உறுதுணையாய் இருந்து வருகின்றார்.
மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டரும் நூல்கள் பரப்புரை பணியினை செய்து வருகின்றார்.
டாக்டர் இராஜேந்திரன் பெரியார் களஞ்சியம் நூல்களை முழுமையாக வாங்கிச்சென்றார். ஒரே நாளில் மட்டும் ரூ.7000 க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.50,000 க்கு இயக்க நூல்கள் விற்பனையாகியுள்ளது.
