இந்நாள் – அந்நாள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1974 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் நாள்  முதல் 9ஆவது நாள் வரை யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வின் போது ஒரு பெரிய துயரம் நிகழ்ந்தது.

நிகழ்வின் பின்னணி: மாநாட்டு அறிஞர் களைச் சிறப்பிக்கும் நிகழ்வு (10.1.1974)
ஜனவரி –10 அன்று யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடக்கவிருந்தது. ஆனால், அரசியல் காரணங் களால் அப்போதைய மேயர் அல்பிரட் துரையப்பா அனுமதி மறுத்ததால், நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்தனர்.

அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்புகள்: நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் பெரும் குழப்பம் விளைந்தது.

துப்பாக்கிச் சூடு: இதைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  மின்சாரக் கம்பிகள் அறுந்து மக்கள் கூட்டத்தின் மீது விழுந்தன. மக்கள் கலைந்து ஓடினர். பெண்கள், குழந்தைகள் கூட்ட நெரிசலுக்குள் சிக்கிக் கொண்ட அவர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

இந்தக் கொடூர சம்பவத்தில் 11 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வரலாற்றுத் தாக்கம்: இந்தத் துயரச் சம்பவம் ஈழத் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கல்வி சார்ந்து நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறை, பின்னாட்களில் ஈழத்தில் தமிழ்த் தேசியவாதம் மற்றும் ஆயுதப் போராட்டம் தீவிரமடைவதற்குவழி வகுத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *