அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்திரா பல்கலைக் கழகத்திடமிருந்து 31.37 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.10 தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா (SASTRA) நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்திலிருந்து அதனை வெளியேற்றத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம், அரசுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலத்தைத் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரியும், அதற்குப் பதிலாகத் தங்களிடம் உள்ள மாற்று நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, இந்தக் கோரிக்கையை நிராகரித்து அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சாஸ்திரா நிர்வாகம் தொடர்ந்த மனுக்களைத்தான் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

இதற்கிடையில், 2023-இல் சென்னை உயர்நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் நிலத்தை காலி செய்ய வேண்டும் அல்லது அரசுடன் பேசித் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், சாஸ்திரா பல்கலைக்கழகம், “அரசுக்கு நாங்கள் மாற்று இடம் கொடுப்பதாகக் கூறியதை அரசு ஏற்றுகொண்டது. ஆகையால் இந்த உத்தரவை திரும்பப்பெறவேண்டும்” என்று கூறியது. இதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, சாஸ்திரா தரப்பில் கொடுக்கப்பட்ட மாற்று நிலம், அரசு நிலத்திற்கு ஈடாக இல்லை என்றும், அந்த நிலம் ஒரு நீர்நிலைப் பகுதி என்றும் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியது.

அதன் பிறகும் சாஸ்திரா பல்கலைக்கழகம் நிலத்தைத் தராமல், “மாணவர்களின் எதிர்காலம் கருதி அரசு இந்த விவகாரத்தில் அரசு நாங்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறி வழக்கை இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில் நேற்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆக்கிரமிப்பாளர் வழங்கும் மாற்று நிலத்தை ஏற்பதும், நிராகரிப்பதும் அரசின் முழுமையான அதிகாரம் ஆகும். அரசு நிலத்தை உரிமையாக யாரும் கோர முடியாது.

சம்பந்தப்பட்ட நிலம் சிறைச்சாலை அமைப்பதற்காக அரசுக்குத் தேவைப்படுகிறது. இத்தகைய பொது நலத் திட்டங்களுக்கு நிலம் அவசியம் என்பதால், பல்கலைக்கழகத்தின் கோரிக்கை செல்லாது.

நீண்டகாலத் தாமதம்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு வழக்குகள் மூலம் இந்த நில விவகாரம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து வழக்குத் தொடுப்பதன் மூலம் அரசு திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் தடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் மற்ற நிறுவனங்களுக்கு அரசு நிலம் வழங்கியுள்ளது என்பதைக் காரணம் காட்டி, தங்களுக்கும் நிலம் வழங்க வேண்டும் என்று சாஸ்திரா பல்கலைக்கழகம் சம உரிமை கோர முடியாது.

வெளியேற்ற உத்தரவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உதவியுடன் அடுத்த நான்கு வாரங்களுக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த அந்த நிலத்திலிருந்து வெளியேற்றி, நிலத்தை அரசு வசப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *