கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கள்ளக்குறிச்சி, ஜன.10 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முத லீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த பவுசென் குழுமம், இந்தியாவிற்காக காலணிகளை உற்பத்தி செய்வதற்காக கள்ளக்குறிச்சியில் உற்பத்தி ஆலையை அமைக்க தொடங்கி உள்ளது. சாத்தனூர் சிப்காட்டில் ரூ.2,325 கோடி முதலீட்டில் தைவான் ஆலையின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இது தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு மற்றொரு மைல்கள் ஆகும். காலணி மற்றும் உற்பத்தி, சுற்றுசூழல் அமைப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, உலகளாவிய நிறுவனங்கள், மேம்பட்ட உற்பத்தி திறன்கள், பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. வலுவான உட்கட்டமைப்பு, திறமையான மனித வளம் மற்றும், முன்னெச்சரிக்கை கொள்கைகளால் தொழிற்துறை முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக தமிழ்நாட்டின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *