சென்னை, ஜன.10 உங்கள் பெயர், உங்கள் உறவினர்கள்- நண்பர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஜனவரி – 18 க்குள் உறுதி செய்யுங்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில், அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பயிற்சி பெறுகின்ற 4,500 பேருக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை, சென்னை பாரிமுனையில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், உங்கள் பெயர், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தயவுசெய்து சரிபாருங்கள். இல்லையென்றால், உடனடியாக பி.எல்.ஏ-2 முகவர்களைத் தொடர்புகொண்டு விண்ணப்பம் அளித்து, பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை இதற்கு அவகாசம் உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.
