இந்தூர் துயரம்! ஜாதி வெறியின் நச்சுக்கலவை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாணன்

மும்பையில் உள்ள ஆசியாடிக் சொசைட்டி மிகவும் பழமையான அரிய நூல்கள் அடங்கிய களஞ்சியம் அங்கு 1700 ஆண்டுகால இந்தூர் குறித்த நூல் ஒன்று உள்ளது.

முகலாய சாம்ராஜ்யம் வலுவிழந்த பிறகு கி.பி.1700 முதல் பேஸ்வாக்களின் அரசாட்சியில் இந்தூர் ஆளுநராக ஹோல்கர் இருந்து பின்னர் இந்தூர் சமஸ்தானத்தை உருவாக்கினார்கள். மிகவும் கொடூர ஜாதிவெறி நூற்றாண்டுகள் அடித்தட்டு மக்களை நசுக்கி எடுத்தது,

பேஸ்வாக்கள் மராட்டியத்தில் கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் விளக்குமாற்றையும் கட்டிய ஜாதிக்கொடுமை. திருவாங்கூரில் மேலாடை அணியத் தடை, எண்ணெய் வாங்கத் தடை புத்தாடைகள் அணியத் தடை.

இந்தூரில் குடிநீர் அருந்தத் தடை

ஆம். இந்தூரில் ஹோல்கர் வம்சம் முழுக்க முழுக்க பார்ப்பன குருமார்களின் கண் அசைவுகளில் தான் நடந்தது. இந்தூர் ஹோல்கர் வம்சம் ரோஜாநமா(அன்றாட குறிப்பு)க்களில் காலையில் பார்ப்பன குருவின் காலை கழுவி அந்த நீரை அரண்மனையில் அனைத்து பகுதியிலும் தெளித்து அன்றைய உணவு பண்டங்களிலும் தெளித்த பிறகுதான் மன்னர் காலைக்கடன் கழிக்கச்செல்வார்

அது அவர்களது சொந்த விருப்பு வெறுப்பு. ஆனால், அந்த நீர் சாமானியர்களுக்கு எட்டாத ஒன்றாக இருந்தது.  தாழ்த்தப்பட்ட மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகம் குளம், கிணறு, ஆறு மற்றும் வாய்க்கால்களில் கால்கள் கூட நனைக்கக் கூடாது.

அவர்களுக்கு என்ன தண்ணீர் என்றால் உயர்ஜாதியினர் பயன்படுத்திய நீர் வீதிகளின் பின்புறம் குட்டை போல் தேங்கும். அந்த குட்டைக்கு அருகில் இவர்களாகவே குழி தோண்டி அதில் ஊறும் தண்ணீரைத்தான் குடிக்க புழங்க பயன்படுத்த வேண்டும்.  பல நேரங்களில் அந்த குழியில் பன்றிகள் படுத்து தூங்கும், அதுமட்டுமா “ரொட்டி தான்” என்ற ஒரு தூண் இருக்கும். அனைத்து உயர்ஜாதியினர் வீடுகளுக்கு பின்னால் அது இருக்கும். அந்த தூணில் மேலே மிச்சம் இருக்கும் ரொட்டி, சோறு, இதர உணவுப் பொருட்களை வைத்துவிடுவார்கள். இருட்டிய பிறகு அதை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். அதில் பூச்சி, எறும்பு பறவைகளின் எச்சம் எல்லாம் இருக்கும், குளிப்பதற்கு வனத்தில் மேய்ச்சல் கால்நடைகளுக்காக வெட்டபட்ட குட்டைகளில்தான் குளிக்கவேண்டும். அதுவும் கால்நடைகள் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு கருக்கலில் சென்றுதான் குளிக்கவேண்டும். மிகவும் கொடூரமான காலகட்டம் (1980களில் கூட உயர்ஜாதியினர் வீட்டில் இருக்கும் மிச்ச மீதி சோற்றை இரவு வந்து பெற்றுச்செல்லும்  பழக்கம் சில சமூகத்தினருக்கு தரும் வழக்கம் தமிழ்நாட்டின் கிராமங்களில் இருந்தது).

இந்தூர் விமான நிலையத்திற்கு மோடி அரசு அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் என்று பெயர் வைத்துள்ளது என்றால் அவரது காலகட்டம் பார்ப்பனர்களுக்கு சுவர்க்கம் என்று ஒன்று இருந்தால் அதில் உள்ள சுகபோகங்களை விட அதிகம் இவர்களுக்கு கிடைத்தது.

சாமானியர்களுக்கு நரகத்தை விட கொடுமையான வாழ்க்கை கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் அதாவது 4 முதல் 5 தலைமுறை இந்தக் கொடுமையை அனுபவித்தார்கள்.

ஆங்கிலேயர்கள் வந்த பிறகு இந்தகொடுமை தணிந்து சுதந்திர இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரின் அரசமைப்புச்சட்டத்தால் சுதந்திரமாக குளிக்க குடிக்க நீர் கிடைத்தது.

ஆனால் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் ஹோல்கர் காலத்திற்கு இந்தூர் சாமானிய மக்கள் கொண்டு செல்லப்பட்டுவிட்டார்களோ என்று எண்ணத் தூண்டும் கொடூர நிகழ்வு நடந்துள்ளது.

மரணங்கள் குறித்து
மருத்துவமனையின் மவுனம்

பகிரத்பூரில் 17.12.2025 அன்று முதலில் 5 பேர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடுமையான காலராவினால் பாதிக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். சில மணி நேரத்திலேயே 5 பேர் மரணம்.

தனியார் மருத்துவமனை என்ன செய்யவேண்டும்? உடனடியாக, அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனையோ ரூ.50,000 வாங்கிக் கொண்டு தான் பிணத்தை தந்தார்கள்.

மேலும் காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் வருவார்கள் என்று உடனடியாக காலரா தொடர்பான மருந்துகளை ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்து கொள்முதல் செய்தது அந்த தனியார் மருத்துவமனை.

இந்தூரில்  டிசம்பர் கடைசிக்குள் 3000 பேர் சிகிச்சைக்குச் சென்றுவிட்டனர். இதில் 16 பேர் மரணம் ஆனால் அரசு நீதிமன்றத்தில் உடல் உபாதையினால் 4 பேர் மரணம் என்று கூறியது.

இந்தூர் மேயர் 10 பேர் மரணம் என்று கூறினார். அதிலும் சிலர் ஏற்கெனவே உள்ள உடல் நலப் பிரச்சினையால் மரணம் என்று கூறிவிட்டார். இறந்தவர்கள் அனைருவருமே கடுமையான காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு நினநீர் வற்றி மூளைக்குச் செல்லும் நரம்புமண்டலம் செயலிழந்ததால் மரணம்.

இதில் 5 மாதக் குழந்தையும் அடங்கும். இந்தக் குழந்தை 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பது குறிப்பிடத்ததக்கது.

இந்தூர் தூய்மை இந்தியா திட்டம் வந்த பிறகு தொடர்ந்து 8ஆவது ஆண்டாக இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்ற விருதை வாங்குகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் கூட இந்தூரை விட தூய்மையானதாக இல்லையா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழத்தான் செய்யும். ஆனால் இந்தூருக்கு மட்டும் ஏன் முதலிடம் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். இந்தூர் மண்டசோர், போபால் உள்ளிட்ட பல நகரங்களில் சுகாதாரமற்ற குடிநீரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் ஆகும். இது 2022-ஆம் ஆண்டு வெளிவந்த சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

The CAG report of 2019 had noted finding of harmful bacteria in water samples collected in Indore and Bhopal and pointed to “lack of monitoring of filter plants at operational level as well as distribution level”. The report also noted that the authorities concerned had assured the CAG that they will take remedial action.

https://www.deccanchronicle.com/opinion/dc-comment/dc-edit-how-indore-slipped-up-1928346

இந்தூருக்கு நர்மதா நதியில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. உயஜாதியினர் குடியிருப்பில் பல பகுதிகளின் வழியாக நீர்க்குழாய் பகிரத்பூர் என்ற பகுதிக்கு வருகிறது.

இறந்தவர்களின் பெயர்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், இறந்தவர்கள் அனைவரும் சாமானிய மக்கள் என்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உயர்ஜாதி குடியிருப்பு கழிப்பறைகள், கழிவுகள் அனைத்தும் கீழே செல்லும் குடிநீர்க்குழாயின் மேல் தேங்கும் விதத்தில் கட்டப்பட்டவை.

இதனால் நகரில் உள்ள மனிதக்கழிவுகள் அனைத்தும் மட்டமான குடிநீர்க் குழாயில் உள்ள குடிநீரோடு கலந்துவிட்டது. அதனால் பகிரத்பூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீரில் மனித மல நாற்றம் அடிக்கிறது என்று 2022 ஆண்டிலிருந்தே மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்துவருகின்றனர். போராட்டம் நடத்திவிட்டனர். ஆனால் பலன் தான் இல்லை. இதுதொடர்பாக டேக் இட் பாலிசியாக எடுத்துகொண்ட மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதாவது உணவுப்பொருளுக்கு இணையான அளவும் நீரை வாங்கத் துவங்கிவிட்டனர்.

பகிரத்பூர் பகுதி மக்கள் பெரும் செல்வந்தர்கள் இல்லை, ஆனால் அவர்களின் உழைத்து ஈட்டிய பணத்தில் பெரும் பகுதி குடிநீருக்கு என்று சென்றுவிடுகிறது.

கங்கை நீரை மண்ணிற்கு கொண்டுவந்த பகிரதனின் பெயர் உள்ள பகுதிதான் அது. அவர் கங்கை நீரைக் கொண்டு வந்தாரோ என்னவோ மிகவும் மோசமான நீர் தான் மக்களுக்கு சென்றடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *