பூமியின் சுழற்சி வேகமும்… மின்னணுப் பொருள்களில் பாதிப்பும்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வழக்கமாக ஒரு நாளில் 86,400 விநாடிகள் உள்ளன. ஆனால், 2021-ஆம் ஆண்டு முதல் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதால், ஒரு நாளின் நீளம் சராசரியாக 0.05 மில்லிவிநாடிகள் குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூலை 22 அன்று இதுவரை இல்லாத அளவாக 1.34 மில்லிவிநாடிகள் குறைந்து, மிகக் குறுகிய நாளாகப் பதிவானது.

  • ஆரம்பம்: சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாயு மற்றும் துகள்களின் கூட்டத்திலிருந்து பூமி உருவானபோதே சுழலத் தொடங்கியது.
  • காரணம்: விண்வெளியில் காற்று மற்றும் உராய்வு (Friction) இல்லாததால், அன்று தொடங்கிய சுழற்சி இன்றும் தடையின்றித் தொடர்கிறது.

நிலவின் பங்கு (சுழற்சி வேகம் குறைதல்)

  • ஆரம்பத்தில் பூமி 8 முதல் 12 மணி நேரத்தில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடித்தது.
  • நிலவின் ஈர்ப்பு விசை கடலில் அலைகளை உருவாக்குவதன் மூலம் ஒருவித ‘பிரேக்’ (Tidal Braking) போலச் செயல்பட்டு, பூமியின் சுழற்சி வேகத்தைக் குறைத்தது. இதன் விளைவாகவே ஒரு நாளின் நீளம் 24 மணிநேரமாக அதிகரித்தது.

வேகம் அதிகரிக்கக் காரணம் என்ன?

நிலவு வேகத்தைக் குறைத்தாலும், சமீபகாலமாக வேகம் அதிகரிக்க காலநிலை மாற்றம் (Climate Change) முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

  • துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால், பூமியின் நிறைப் பரவல் மாறுகிறது.
  • ஒரு ஸ்கேட்டிங் வீரர் கைகளைத் தன் உடலோடு சேர்த்து வைக்கும்போது வேகமாகச் சுழல்வதைப் போல, உருகும் நீர்மட்டம் பூமியின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

ஏற்படக்கூடிய பாதிப்புகள்: சுழற்சி வேகம் தொடர்ந்து அதிகரித்தால் தொழில்நுட்ப ரீதியாகப் பின்வரும் சிக்கல்கள் எழலாம்:

  • ஜிபிஎஸ் (GPS) குழப்பம்: செயற்கைக்கோள்கள் மற்றும் ஜிபிஎஸ் துல்லியமான நேரத்தைச் சார்ந்திருப்பதால், வழிசெலுத்தல் அமைப்புகள் (Navigation) பாதிக்கப்படும்.
  • தொழில்நுட்ப ஸ்தம்பிப்பு: ஸ்மார்ட் கருவிகள் மற்றும் கணினி அமைப்புகளின் நேரக் கணக்கீடு மாறுபடும்.

இதைத் தவிர்க்க, பன்னாட்டு நேரக் கணக்கீட்டாளர்கள் ‘லீப் விநாடிகளை’ (Leap Seconds) அணுக்கடிகாரத்தில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குறைப்பதன் மூலமோ புவி சுழற்சிக்கு ஏற்ப நேரத்தைச் சரிசெய்கின்றனர்.

வேகம் அதிகரிப்பது தற்காலிகமானது என்றும், நீண்ட காலத்தில் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமி மீண்டும் பழைய வேகத்திற்கே திரும்பும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *