தமிழர் தலைவருடன் அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவர் டாக்டர் அனில் ஜெய்ஹிந்த் சந்திப்பு
சமூகநீதிக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது;
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!
மற்ற பிரச்சினைகள்பற்றி தலைவர்கள் முடிவு செய்வர்!
சமூகநீதிக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது;
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!
மற்ற பிரச்சினைகள்பற்றி தலைவர்கள் முடிவு செய்வர்!
சென்னை, ஜன.9 காங்கிரஸ், சமூகநீதிக்கான குரலைக் கொடுக்கிறது. நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். கூட்டணியில் உள்ள மற்ற பிரச்சினைகள்பற்றி சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று பேட்டியில் குறிப்பிட்டனர்.
- தமிழர் தலைவருடன் அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவர் டாக்டர் அனில் ஜெய்ஹிந்த் சந்திப்பு சமூகநீதிக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது; தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி! மற்ற பிரச்சினைகள்பற்றி தலைவர்கள் முடிவு செய்வர்!
- சமூகநீதிக்காக பாடுபடக்கூடிய இயக்கம்
- ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு?
- அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணிபற்றி…?
நேற்று (8.1.2026) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசியத் தலைவர் டாக்டர் அனில் குமார் ஜெய்ஹிந்த்(யாதவ்), சென்னை பெரியார் திட லுக்கு வருகை தந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பிற்குப் பிறகு இருவரும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சமூகநீதிக்காக பாடுபடக்கூடிய இயக்கம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசியத் தலைவர் டாக்டர் அனில் குமார் ஜெய்ஹிந்த்(யாதவ்) அவர்களை, மண்டல் கமிசன் போராட்ட காலத்திலிருந்து நான் அறிவேன். அவர் இளைஞராக இருந்த காலத்திலிருந்தே அவ்வியக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். இப்போது காங்கிரஸ் என்பது சமூகநீதிக்காக பாடுபடக்கூடிய இயக்கம். அந்தப் பிரிவின் தலைவராக நம்முடைய ஜெய்ஹிந்த் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரியார் திடலுக்கு எங்களுக்கு சிறப்பு செய்வதற்காக வந்தார். இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தியாவில் எதிர்காலத்தில் சமூகநீதியை, அந்தக் களத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பது பற்றி திட்டங்களை நாங்கள் விரிவாகப் பேசினோம்.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு?
செய்தியாளர்: இன்றைக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று காங்கிரசில் கேட்கிறார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: அரசியலில் அதை முடிவு செய்ய வேண்டியது தி.மு.க. கூட்டணியினுடைய தலைவர் மதிப்பும் மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதே போல் அங்கு முடிவு செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் குறிப்பாக இளந்தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற தலைவர்களே! இந்தக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி! மற்றவர்கள் பேசுவது வேண்டுமானால் ஊடகங்களுக்குத் தீனியாக இருக்கலாமே தவிர, மற்றபடி அதற்கு எந்தவிதமான மதிப்பும் இருக்க முடியாது. வழக்கம் போல தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி என்பது இந்தப் பிரச்சாரங்கள் காரணமாக, மேலும் அது பலமாகும். சந்து பொந்துகள் அடைக்கப்படும். 2026 இல் மீண்டும் இதே தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும். அப்போது முடிவு செய்ய வேண்டியதை இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை.
அ.தி.மு.க. – பா.ம.க.
கூட்டணிபற்றி…?
கூட்டணிபற்றி…?
செய்தியாளர்: அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி சேர்ந்திருக்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: ஏற்கெனவே அவர்கள் ஒன்றாக இருந்தபோதே வென்றது தி.மு.க. கூட்டணி. இப்போது அவர்கள் ஒன்றாக இல்லை என்பதே பதில்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
