நீலகிரியில் 35 கிராம ஊராட்சிகள் 96 ஆக அதிகரிப்பு அரசிதழில் வெளியீடு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நீலகிரி, ஜன.9 நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் தற்போது 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 27 கிராம ஊராட்சிகள் மலைப்பகுதிகளாக இருப்பதாலும், போதுமான சாலை வசதிகள் இல் லாமலும், குக்கிராமங்கள் அதிக அளவில் இருப்பதாலும் ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி அலுவலகங்களை அணுகுவதற்கு வசதிகள் இல்லாத நிலையில் இந்த ஊராட்சிகளை பிரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நீலகிரியில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து, அவற்றை 88 கிராம ஊராட்சிகளாகவும், மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளுடன் மறுசீரமைப்பு செய்து கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி ஊட்டி ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள கக்குச்சி, தும்மனட்டி, உல்லத்தி, தொட்டபெட்டா, தூனோி, கடநாடு, எப்பநாடு, கூக்கல், நஞ்சநாடு, பாலகொலா, இத்தலார், முள்ளிகூர், மேல்குந்தா ஆகிய 13 கிராம ஊராட்சிகளை 38 கிராம ஊராட்சிகளாக பிரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலூர், உபதலை, எடப்பள்ளி, பேரட்டி ஆகிய 4 கிராம ஊராட்சிகளை 11 கிராம ஊராட்சிகளாக பிரிக்கலாம் எனவும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள நெடுகுளா, ஜக்கனாரை, நடுஹட்டி, கொணவக்கரை, கெங்கரை, தேனாடு, குஞ்சப்பனை ஆகிய 7 கிராம ஊராட்சிகளை 19 கிராம ஊராட்சி களாகவும், கூடலூர் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள நெலாக்கோட்டை, மசினகுடி, சேரங்கோடு ஆகிய 3 கிராம ஊராட்சிகளை 20 கிராம ஊராட்சிகளாக பிரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிகள் மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க விரும்பினால் டிசம்பர் 17-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, இறுதி செய்து அதனை நீலகிரி மாவட்ட அரசிதழில் இறுதி அறிவிப்பாக வெளியிடப்பட்டு உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *