சென்னை, ஜன.9 உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியதிட்டம் தொடர்பாக 2 வாரங்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக்எங்கெல்ஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு இதுவரை விதிமுறைகள்வகுக்கப்படவில்லை. ஒன்றிய அரசு 2013-இல் அமைத்த ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தையும் பின்பற்றவில்லை.ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பின் பற்றுவதுதொடர்பாக அரசாணையோ,விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இதனால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாமல் அரசுஊழியர்கள் த விக்கின்றனர்.எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியத் திட்டத்தைஅமல்படுத்த உத்தரவிட வே ண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவேவிசாரணைக்கு வந்தபோது, ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுமீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கலைமதி அமர்வில்விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன்காணொலி வழியாக ஆஜராகி,“தமிழ்நாடு அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின்அடிப்படையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்துள்ளது.இத்திட்டம் தொடர்பாக இருவாரங்களில் அர சாணை பிறப்பிக்கப்படும்” என்றார்.இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
டாடாவின் கையில் விமான நிறுவனங்கள் குவிகின்றன
புதுடில்லி, ஜன.9 ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு டாடா குழுமம் வாங்கியது. அதன் பிறகு, விமான சேவையை ஒழுங்குபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதல் முறையாக போயிங்787-9 விமானத்தை வாங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முதல் ட்ரீம்லைனர் விமானம் ஆகும்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள போயிங்நிறுவனத்தின் எவரெட்ஆலையில், இந்த ட்ரீம்லைனர் விமானத்தின் உரிமை மாற்றம் தொடர் பான நடவடிக்கையை ஏர்இந்தியா நிறைவு செய்தது.சிவில் விமானப் போ க்குவரத்து இயக்குநரகத்தின்(டிஜிசிஏ) ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த விமானம் அடுத்தசில நாட்களில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இந்த புதிய விமானம் எகானமி, பிரீமியம் மற்றும் பிசினஸ் என 3 வகுப்பு இருக்கை அமைப்புகளை கொண்டது.
