மும்பையில் 1940 – தந்தை பெரியார் – டி.வி.ஜாதேவ் –
எம்.ஆர்.ஜெயகர் சந்திப்பு இந்நாள் (9.1.1940)
ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைவகித்த எம்.ஆர்.ஜெயகர் மற்றும் சிறந்த பகுத்தறிவுவாதியான டி.வி.ஜாதவ் ஆகியோர் தந்தை பெரியாரை மும்பையில் (9.1.1940) சந்தித்தனர்.
எம்.ஆர். ஜெயகர் (Mukund Ramrao Jayakar) சிறந்த வழக்குரைஞர், கல்வியாளர், பொதுவுடைமை கோட்பாடுகளில் தீவிரமாக இருந்த இவர் பூனா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆவார். லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டார் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பங்கு வகித்தவர்.
