‘‘பெரும் கூட்டணிகள் (?)’’ தமிழ்நாட்டை அசைக்காது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ெருமையும் ஆடம்பரமும் வாக்குகளை ஈர்க்க முடியாது என்பது, தமிழ்நாட்டில் பாஜக இன்னும் உணராத ஒரு உண்மை. அதற்கான சான்றாக, அதிமுக தலைமையிலான தமிழ்நாட்டில் பாமக அணியைப் பிடிக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, கூட்டணியை விரிவுபடுத்தும் அவசர முயற்சியாக, அன்புமணி ராமதாஸுக்கு 20 தொகுதிகள் வரை வழங்க முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக தலைமை அழைப்பின்பேரில் புதுடில்லி சென்ற பிறகே நடந்ததால், பாஜக தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளை மட்டுமே கொண்ட ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மிகுந்த பதற்றத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், திமுக தலைமையிலான கூட்டணி ஒன்றுபட்ட நிலையில் உறுதியாக இருக்கும் நேரத்தில், புதிய கூட்டணிகளில் சேர்வதைத் தவிர்க்கின்றன. திமுக கூட்டணியின் நிலைத்தன்மையும், ஆட்சியமைக்கும் திறனும் தெளிவாகக் காணப்படுகிறது. அதிமுகக்கு தனது கூட்டணியை உடைக்கும் அளவுக்கு சுய மரியாதை இருக்க வேண்டும். ஆனால், “நாம் செல்லும் வழியே அனைவரும் வர வேண்டும்” என்ற நிலைப்பாட்டைக் கொண்ட ஒரே தலைமை கட்சியாக அதிமுக தன்னை பெருமைப்படுத்திக் கொண்டாலும், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் உடன் ஆலோசிக்காமல் எடுத்த முடிவு, பாமக பிளவுபடாது என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை. ஏனெனில், கட்சியின் நிறுவனர் என்ற அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தன்னிடமே இருப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாஜக மற்றும் அதிமுக மறந்துவிட்ட ஒன்று என்னவென்றால், ஆணவ மனப்பான்மை அவர்களை “பெரும் கூட்டணி” என்ற உயரிய கோஷங்களை முன்வைக்கத் தூண்டியிருக்கலாம்; ஆனால், தமிழ்நாட்டில் பாஜக மிகவும் போராடி வரும் உண்மை என்னவென்றால், மக்களின் கற்பனைக்கும் நம்பிக்கைக்கும் அது இன்னும் இடம் பிடிக்கவில்லை என்பதே. பல்கட்சி “வானவில் கூட்டணி” எனும் காட்சியை காட்டி, அதில் ஓபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம்) மற்றும் டி.வி. தினகரன் போன்ற தலைவர்கள் இடம்பெறுவதை வெளிப்படுத்தி, நாட்டின் பிற பகுதிகளுக்கு “தமிழ்நாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளோம்” என்று காட்டவே பாஜக முயலுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், வாக்காளர்களை கவர்வதற்காக கூச்சலிடும் கோஷங்களுக்கும், விற்பனைப் பேச்சுகளுக்கும் தமிழ்நாடு அரசியல் ஒரு சந்தை அல்ல என்பதே உண்மை.

மொழியாக்கம்: கோ.கருணாநிதி

நன்றி: ‘டெக்கான் கிரானிக்கள்’ 9.1.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *