மாஸ்கோ, ஜன. 9– பன்னாட்டு கடல் சட்டத்தை மீறி, தங்களுடைய எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல்களை மூழ்கடிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்தே அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கூறி, அந்நாட்டில் இருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. இதன்படி, ரஷ்யாவுக்கு சொந்தமான, ‘ பெல்லா ஒன்று ‘ என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை பறிமுதல் செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வந்தது. ஆனால் ரஷ்யா, ‘மரினேரா’ என பெயர் மாற்றி தன் நாட்டுக் கொடியை ஏற்றி பாதுகாப்பு அளித்து வந்தது
ஆனால் நேற்று வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்த எண்ணெய் டேங்கர் கப்பலை, அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை, இதை பன்னாட்டு கடல் சட்டத்தின் மீறல் என்று கண்டித்துள்ளது
ரஷ்ய எம். பி., அலெக்சி ஜுராவ்லெவ், ‘அமெரிக்கா இதே நிலையைத் தொடர்ந்தால், அவர்களது கப்பல்களை மூழ்கடித்து விட வேண்டும். ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கைப்படி பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்,’ என்று கடுமையாக எச்சரித்தார்.
