மும்பை பாண்டூப் (மேற்கு) பகுதியில், வில்லேஜ் சாலையில் உள்ள, கல்வித் தந்தை தேவதாசன் பிரைட் உயர்நிலைப் பள்ளியின் ‘தேவதாசன் அரங்கில்’ நடைபெற்ற, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – 2026 மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில், பெரியார் பெருந்தொண்டர்களான என்.வி.சண்முகராஜன், ஆ.பாலசுப்பிரமணியம், கு.தர்மலிங்கம்,
இரா.ஓம்பிரகாஷ் (பூனே) ஞான.அய்யாப்பிள்ளை, எஸ்.பி.செழியன் ஆகியோருக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘பெரியார் விருது” வழங்கி சிறப்பித்தார்கள். உடன் மும்பை இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பெரியார் பாலா உள்ளிட்டோர் உள்ளனர். (மும்பை, 3.1.2025)

மும்பை பாண்டூப் (மேற்கு) பகுதியில், வில்லேஜ் சாலையில் உள்ள, கல்வித் தந்தை தேவதாசன் பிரைட் உயர்நிலைப் பள்ளியின் ‘தேவதாசன் அரங்கில்’ நடைபெற்ற, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – 2026 மாநாட்டின் இரண்டாம் நாள் ஆங்கில அமர்வில், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இங்கர்சால் – ரஞ்சனி ஆகியோருக்குப் பிறந்த பெண் மகவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘இலக்கியா மணியம்மை” என்று பெயர் சூட்டினார். ‘இங்கர்சால்’ இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் – நங்கை ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. (மும்பை, 4.1.2026)
