இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையில் விரைவான ஓட்டத்தில் பழைய கசப்பான நினைவுகள் அவ்வப்போடு வந்து நமது மனதை கலங்கச்செய்யும். இதன் விளைவு நமது நடவடிக்கைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். இதனால் தினசரி வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. மனஅமைதியும், தன்னம்பிக்கையும் குறையும். கடந்த காலங் களில் செய்த தவறுகள், மனஅமைதியை பாதிக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதால் மனச் சோர்வு, பதற்றம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
வாழ்க்கையில் அனைவரும் தவறு செய்வது இயல்புதான். அந்த தவறு கற்றுக் கொடுத்த பாடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும் என்பதை புரிந்துகொள்வது அவசியம். ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபட விடாமல், மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் கசப்பான நினைவுகளை மறக்க சில விஷயங்களைப் பின்பற்றலாம். அதற்கான ஆலோ சனைகள் சிலவற்றை பார்ப்போம்.
சில படங்கள், பொருட்கள், வாசனைகள் அல்லது இடங் கள் நமக்கு மோசமான நினைவுகளைத் தூண்டலாம். அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு செல்வதையோ அல்லது அந்த நினைவுடன் சம்பந்தப்பட்ட நபரையோ, பொருட்களையோ தவிர்த்தால் நாளடைவில் அந்த நினைவை மறக்க முடியும்.
கசப்பான நினைவுகள் மனதில் எழும்போது, ஒரு நிமிடம் நிதானமாக செயல்பட்டு மகிழ்ச்சிக்குரிய நினைவுகளை மனதிற்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் தினந்தோறும் அந்தந்த நொடியில் வாழக் கற்றுக் கொள் ளுங்கள்.
தினமும் உங்களை நீங்களே ஏதோ ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போது கசப் பான நினைவுகளை நினைக்க நேரம் இருக்காது. கசப்பான நினைவுகளைப் பற்றி சிந்திப்பதால் நம் உடலை கவனித்துக் கொள்ள தவறுகிறோம். எனவே உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். நம்பகத்தன்மை வாய்ந்த நபருடன் உங்களின் கசப்பான எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உளவியல் ஆலோசனைகளைப் பெற தயக்கம் காட்டா தீர்கள். மனதை அமைதியான நிலையில் செலுத்துவதற்கு உளவியல் ஆலோசகரை அணுகுவது சிறந்த வழியாகும். எப்போதும் ஒரே மாதிரி நகரும் வாழ்க்கை முறையில், சில சுவாரசியமான மாற்றங்களை ஏற்படுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துங்கள்.