டெக்ரான், ஜன. 9– ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், முப்பத்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது
பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தலைநகர் டெக்ரானில் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தை துவங்கினர் இந்த போராட்டம், இப்போது உச்ச தலைவர் கமேனி ஆட்சிக்கு எதிரானதாக மாறி, நாடு முழுதும் பரவியுள்ளது கமேனிக்கு எதிராக முழக்கமிட்டு ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர் குறிப்பாக, தலைநகர் டெக்ரானின் பிரதான வணிக மய்யமான கிராண்ட் பஜாரில், நேற்று (7.1.2026) கடும் மோதல் வெடித்தது வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு போராட்டம் நடத்தினர்
அப்போது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால், பஜார் முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது; பலர் காயமடைந்தனர்
கடந்த, பத்து நாட்களாக நடக்கும் போராட்டங்களில், இரண்டு போலீசார் உட்பட முப்பத்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும், ஆயிரத்து இருநூறு – க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஜப்பானுக்கு தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை: சீனா அறிவிப்பு
பீஜிங், ஜன. 9- ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். இவருடைய பதவியேற்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்ததுடன் டோக்கியோவுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.
இருபெரும் தலைவர்களும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இணைவோம் என்று அறிக்கையை வெளி யிட்டனர். பின்னர் தமது நாட்டிற்கு எதிராக செயல்பட்டால் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என சனே தகைச்சி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவு கசந்து வர்த்தக உறவு சரியத் தொடங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபரை கைது செய்ததன் பின்னணி இதுதானோ?
வெனிசுலா நாட்டிலிருந்து 5 கோடி பீப்பாய்
கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு கிடைக்கும்
கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு கிடைக்கும்
டிரம்ப் கூறுகிறார்
வாசிங்டன், ஜன. 9- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
கச்சா எண்ணெய்
“வெனிசுலாவிலிருந்து 3 கோடி முதல் 5 கோடி பேரல்கள் வரை உயர்தரமான கச்சா எண்ணெய்யை வழங்க, அந்நாட்டின் இடைக்கால அரசின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தக் கச்சா எண்ணெய் கொள்முதலை அவர்கள் சந்தை விலையிலேயே வழங்க முன்வந்துள்ளனர். அந்தப் பணம் அதிபராகிய என்னால் கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக, வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காக அந்தத் தொகை பயன்படுத்தப்படும். வெனிசுலாவிலிருந்து எண்ணெய் சேமிப்புக் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுவரப் பட்டு, நேரடியாக அமெரிக்காவில் உள்ள இறக்கு மதித் தளங்களுக்கு வந்து சேரும்,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் கைது நடவடிக்கையின்போது 24 வெனிசுலா பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெனிசுலா விவகாரம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் 9.1.2026 அன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் எக்ஸான் (Exxon), செவ்ரான் (Chevron), கோனோகோ பிலிப்ஸ் (ConocoPhillips) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
