புதுடில்லி, ஏப். 25- இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. 23.4.2023 அன்று 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (24.4.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 7 ஆயிரத்து 178 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு குறையத்தொடங்கி வரும் நிலை யில், இன்று (25.4.2023) பாதிப்பு 6,660 ஆக குறைந்து உள்ளது.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்ச கம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 6,660 ஆகக் குறைந்து உள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 9,213 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்றுப் பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது.