தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.1.2026) செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் இராதாநகர். ஜமீன் பல்லாவரம். போஸ்டல் நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம் மற்றும் மேடவாக்கம் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை இராதா நகர் இடையில் 31.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடவு எண் 27 வரையறுக்கப்பட்ட ரயில்வே இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
