டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ’அமித்ஷாவா, அவதூறு ஷாவா’: ‘‘தமிழ் நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படு கிறதா?’’என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றும்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜே.என்.யு. பல்கலைக்கழக விவகாரம் – காவல்துறையின் அத்துமீறல்: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) உமர் காலித்தின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர். இது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை அத்துமீறல் என்கிறது தலையங்கம்.
* 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல்-செப்டம்பர் நடைபெறும்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
தி இந்து:
* வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: டிரம்ப்பின் கருத்துகள் குறித்து பிரதமர் மீது ராகுல் தாக்குதல்: இந்தியா- பாகிஸ்தான் போரின் போது, அதிபர் டிரம்பின் தொலைபேசி அழைப்பு வந்த பின்னர் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார். ஆனால் கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரின் போது அமெரிக்கா கடற்படை கப்பல்களை அனுப்பியும் போரை நிறுத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்துவிட்டார்.
* மக்களவைத் தலைவர் குறித்த நீதிபதி வர்மாவின் கூற்றுகளுடன் உச்ச நீதிமன்றம் ‘கருத்து வேறுபாடு’: மார்ச் 2025இல் டில்லியில் உள்ள நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்ல வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பாதி எரிந்த பணக்கற்றைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ‘தன்னிச்சையாக’ ஒரு குழுவை அமைத்ததன் மூலம், நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின் சட்டப்பூர்வ வரம்பை மீறிவிட்டார் என்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கூற்று, தங்களுக்கு உடன்பாடானதல்ல, உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (VB-G RAM G) வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை பலவீனப்படுத்துகிறது என்று பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரெஸ் கருத்து. MGNREGA-அய் ரத்து செய்து, அதை மத்திய கட்டுப்பாட்டில் உள்ள திட்டத்துடன் மாற்றுவதன் மூலம் வேலை செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை அழிக்கும் “புல்டோசர் சட்டம்” என்று ஜார்க்கண்ட் NREGA கண்காணிப்பு உறுப்பினர்கள் கண்டனம்.
தி டெலிகிராப்:
* ஜே.என்.யு. வளாக நிகழ்வின் போது எழுப்பப் பட்ட முழக்கங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முயன்ற பல்கலைக்கழக நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்ததுடன், நிர்வாகமும் டில்லி காவல்துறையும் போராட் டத்தைக் குற்றமயமாக்குவதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஜேஎன்யுடிஏ) குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
